கேள்வி :- அ.தி.மு.க. அரசின் கல்வித் துறை எப்படித்தான் செயல்படுகிறது? முதுகலை தமிழாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடையாணைப் பிறப்பித்திருக்கிறதே?
கலைஞர் :- இரண்டாண்டு காலத்தில் நான்கு கல்வி அமைச்சர்கள் பணியாற்றினால் இந்தக் கதி தான்! கடந்த 21-7-2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது. அத்துடன் இணைந்து முதுகலைத் தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வும் நடை பெற்றது. 2,881 பணி இடங்களுக்கான இந்தத் தேர்வை ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் எழுதினார்கள். 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் 605 பேர் மட்டும் தமிழ்ப் பாட ஆசிரியர்கள். அப்போது வழங்கப்பட்ட கேள்வித் தாளில் 150க்கு 47 கேள்விகளில் அச்சுப் பிழை இருந்ததாம். இதுகுறித்து விஜயலட்சுமி என்பவர் தொடுத்த வழக்கில் நீதியரசர் நாகமுத்து அவர்களிடம் கேள்வித்தாள் நகல் ஒன்றே கொடுக்கப்பட்டு, அவரும் அதைப் படித்துப் பார்த் திருக்கிறார். கேள்வித்தாளில் கணியன் பூங்குன்றனார் என்பதற்குப் பதிலாக கனியன் பூதுகுன்றனார் என்றும்; இளங்கோவடிகள் என்பதற்குப் பதிலாக இளது கோவடிகள் என்றும்; ஔரங்கசீப் என்பதற்குப் பதிலாக ஔரதுசீப் என்றும்; காங்கிரஸ் என்பதற்குப் பதிலாக காதுரஸ் என்றும்; கங்கை கொண்ட சோழன் என் பதற்குப் பதிலாக கதுகைகொண்ட சோழன் என்றும் அச்சிடப்பட்டிருந்ததாம். அதைப் பார்த்து விட்டு நீதியரசர் அவர்கள், இதுபோன்று ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் ஆசிரியர் பணிக்கான கேள்வித்தாள் தயாரித்திருப் பதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும். தமிழ் மொழி, செம்மொழி அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் நிலையில், இதுபோன்று தவறுகள் நடந்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறிய தோடு, முதுகலைத் தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். அதாவது தமிழ் தவிர மற்ற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிபதி அனுமதித்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டுமென்றும் தெரிவித்திருக் கிறார். வழக்கு விசாரணை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகே தமிழ்ப் பாடத் துக்கு மறு தேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரிய வரும். இதெல்லாம் இந்த ஆட்சியினருக்குக் கிடைத்த சான்றிதழ்கள் தானே?
==தங்களி வருகைக்கு நன்றி==
