Social Icons

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

கோயில் தங்கங்களை அரசு எடுத்துக் கொள்வதுபற்றி ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த வரலாற்றுச் சின்னங் களுள் 92 சின்னங்கள் காணப்படவில்லை என்று கூறப்படுகிறதே?

பதில்: இதுவரை கடவுள் - கடவுளச்சிகள் தான் நம் நாட்டில் காணாமற் போய்க் கொண்டிருந் தார்கள். இப்போது இவையும் அந்தப் பட்டியலில் சேருகிறதா? என்னே கொடுமை! கடும் நடவடிக்கை தேவையே!

கேள்வி: அயோத்தியைச் சுற்றி 252 சதுர கிலோ மீட்டர் பரப்பு எங்கள்  கலாச்சார எல்லை என்று வி.எச்.பி. பொதுச் செயலாளர் பிரவின் தொகாடியா கூறியுள்ளதுபற்றி...
- கே. ஜகாங்கீர், தாராபுரம்

பதில்: வீண் வம்பை விலைக்கு வாங்கி கலவ ரத்திற்குத் தூபம் போடும் அதிகப் பிரசங்கித்தனம்! அதென்ன கலாச்சாரம்! அது என்ன எல்லை?  அட மதவெறியர்களே! பதவியில் இல்லாதபோதே - இப்படி ஒரு வீம்பா?

கேள்வி: விவாகரத்து பெற்றாலும் பெண் ணுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு தரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் சட்டம் சரியானது தானே?
- கா. மல்லிகா மணியரசன், திருநாவலூர்

பதில்: வரவேற்கப்பட வேண்டிய சட்டம் அது!

கேள்வி: கோயில் தங்கங்களை அரசு எடுத் துக் கொள்வதுபற்றி... - திரு.தேவி, அதிராம்பட்டினம்

பதில்: புத்தியும், துணிவும் இருந்தால் அரசு அதைச் செய்யும். திருப்பதி - திருவனந்தபுரம் போதுமே!

கேள்வி: அழகும் - ஆபாசமும் ஒன்றா? - காவேரி சொர்ணம், மதுரை- 2

பதில்: வெளிச்சமும், இருட்டும் ஒன்றா?  சில நேரங்களில் வெளிச்சத்தைச் சுற்றி இருட்டும் இருக்கும்!

கேள்வி: கிருஷ்ணனைப் பற்றி தாங்கள் எழுதிய அறிக்கைக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதே? - துரை. தேசிங்கு, தேவிபட்டினம்

பதில்: மருந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளது என்பதை அறிய மகிழ்ச்சி பொங்குகிறது!

கேள்வி: இந்திய அரசுப் பணிகளில் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும்

14.11 சதவீதம் மட்டுமே என்பது எதைக் காட்டுகிறது? - மா. சேகரன், சென்னை-112

பதில்: பிற்படுத்தப்பட்ட மக்களின் இளிச்ச வாய்த்தனத்தையும், மத்திய அரசு ஆதிக்க ஜாதியினர் வசமே 66 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பின்னும் அடிமையாகவே உள்ளது என்பதையும் காட்டுகிறது!

கேள்வி: இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்னும் ஏணியைத் தேர்தலில் பிஜேபி பயன்படுத்திக் கொள்ளுமோ? - தி. விஜயா, வழக்குரைஞர், சென்னை-40

பதில்: திருமண வீட்டிலேயே ஒப்பாரி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் இழவு வீடு கிடைத்தால் சும்மா இருப்பார்களா?

கேள்வி: இந்திய மொழிகள் அனைத்தும் இந்தியா வின் ஆட்சி மொழி என்பது - ஒரு பிரச்சினையாக இந்தியாவில் இல்லையோ? - ஆறு. குழந்தைவேலன், தூத்துக்குடி

பதில்: முக்கிய பிரச்சினைதான்! பிரச்சினைகள் நாளும் பெருகி வருவதால் இது அழுங்கிக் கிடக்கிறது போலும்!

கேள்வி: தொலைக்காட்சி வந்தபின் வானொலி யின் முக்கியத்துவம் குறைந்து விட்டதே? - தெ. கு.மாறன், வானகரம்

பதில்: உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய செய்தி இது; வானொலி அறிவு கொளுத்தும் அளவுக்கு தொலைக்காட்சிகள் செய்வதில்லை; வானொலி தரம் தாழாமல் உள்ளது. மக்களுக்கு ஓரளவாவது பயன் படுகிறது.

==தங்களின் வருகைக்கு நன்றி==