அறந்தாங்கி கழக மாவட்டம் ஆலங்குடியில் தந்தை பெரியார் 135வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், 11.09.2013 புதன் கிழமை அன்று மாலை 6மணிக்கு நடைபெற்ற, கூட்டத்தினை ஒன்றிய தி.க செயலாளர் குப்பகுடி இரா.இளங்கோ தலைமையேற்றார். மாவட்ட தி.க தலைவர் பெ.இராவணன், மாவட்ட தி.க செயலாளர் க.மாரிமுத்து முன்னிலை ஏற்றனர், நெடுஞ்செழியன் வரவேற்புரையேற்றார் இடி முழக்கம் தஞ்சை இரா.பெரியார்ச் செல்வம், நீண்டதொரு விளக்க உரையாற்றினார்.
அவர் பேசுகையில் தந்தை பெரியாரைப்பற்றி நான் அதிகம் விளக்க தேவையில்லை, இன்றைய பள்ளிப் பாடத்தில் ஏ பார் ஆப்பிள், பி பார் பால், சி பார் கேட் என்று குழந்தைகள் படிகிறார்கள் ஆனால் நாற்பது அம்பது ஆண்டுகளுக்கு முன் பாடப்புத்தகத்தில் இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான், இவன் தச்சன் மரவேலை செய்கிறான், இவன் வண்ணான் துணி துவைக்கிறான், இவன் பரையன் பறைசாற்றுகிறான் கடைசியில் பார்பான் ஒருவன் சிண்டுமுடிந்து பூனூல் போட்டுக்கொண்டு புத்தகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் படத்தை இவர் அய்யர்....... பாடம் படிக்கிறார். என்று இருந்த நிலையை, எம்.எல்.ஏ வந்து மாற்றினாரா, எம்.பி வந்து மாற்றினாரா? நண்பர்களே, தந்தை பெரியாரின் கடும் போராட்டத்தால் இந்த நிலை மாறியது அதன் விளைவாக குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்டு கல்வி வள்ளல் காமராசர் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது நாடெங்கும் கல்வி நீரோடை பாய்ந்தது, 300பேர் ஒரு ஊரில் இருந்தால் அங்கு ஒரு ஆசிரியர் பள்ளி திறக்கப்பட்டது என மேலும் பல சுவையான வரலாற்றுச் செய்திகளை விளக்கிக் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தி.க இளைஞரணித் தலைவர் ப.மாகாராசா, மாவட்ட தி.க இளைஞரணித் துணை தலைவர் குழ.சந்திரகுமார் தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் சோம.நீலகண்டன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணித் தலைவர் சித்தாதிக்காடு பொறியாளர் இரா.கதிர்வேல் அறந்தாங்கி மாவட்ட தி.க துணைத் தலைவர் கறம்பக்குடி முத்து, மாவட்ட தி.க அமைப்பாளர் அ.தங்கராசு, புதுக்கோட்டை யிலிருந்து தங்கவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
கூட்டத்தினை ஏராளமானோர் கேட்டு பயன்பெற்றனர் சிறப்பாக உரையாற்றிய, இரா.பெரியார் செல்வம் அவர்களை பொதுமக்கள் நேரில் வந்து பாராட்டினர். கூட்டம் 8.30க்கு முடிவுற்றது துரை.குமார் நன்றி கூறினார்.
==தங்களின் வருகைக்கு நன்றி==
