வியாழன், 19 செப்டம்பர், 2013
திங்கள், 16 செப்டம்பர், 2013
ஞாயிறு, 15 செப்டம்பர், 2013
அட, தமிழக அரசியலே! மலத்தில் அரிசி பொறுக்கலாமா?
கேள்வி: பெண்களை பாவயோனி யில் பிறந்தவர்கள் என்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா என கி.வீரமணி கேட்கிறாரே? அவருக்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கு?
பதில்: பகவான் கிருஷ்ணன் சொன்ன பகவத் கீதையின் எத்தனையோ வாழ்க்கை தத்துவங்களைவிட்டு, வீரமணியின் கண்ணில் பட்டது எது பார்த்தீர்களா? அவரவர் தரத்திற்கு தகுந்தாற்போல்தான் எண்ணமும், பார்வையும்! கடவுளை நிந்திப்பதாக நினைத்து தன் சுயமரி யாதையை நிந்தித்துக் கொண்டிருக்கிறார் பெரியவர். தந்தை பெரியார் எவ்வளவோ பகுத்தறிவு - சீர்திருத்த வாதங்களை சமூகத்திற்கு அளித்தார். அதையெல்லாம் மறந்துவிட்டு, பறச்சிகளும், பள்ளச்சி களும் ரவிக்கை போட ஆரம்பித்ததால்தான் துணிவிலை ஏறிவிட்டது என்று பெரியார் அன்றைய சூழ்நிலையில் சொன்னதை மட்டும் நினைவு வைத்துக் கொள்வாரா வீரமணியார்? இப்படி ஒரு பதில்.
இவற்றைப் படித்துப் பார்ப்பவர்கள் ஒன் றைச் சிந்திக்கவேண்டும்.
ஆபாசம் - அசிங்கம் - இவற்றின் பெருக் கல் தொகையாக ஒரு கடவுள் கற்பிக்கப்பட் டுள்ளார். குளிக்கும் பெண்களின் நிர்வா ணத்தை இரசிப்பவன் கடவுளா? நாரதன் என் கிற ஆண் கடவுளோடு புணர்ந்த கிருஷ்ண னைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
கிருஷ்ணனைப்பற்றி நாம் எடுத்துக் காட்டுவது நமது கற்பனையல்ல - இந்துப் புராணங்கள் எழுதி வைத்தவைதான்.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண் டும் என்று நினைக்கிறவர்கள், ஒழுக்கத்தை யும், அறிவையும் மதிக்கிறவர்கள் - மக்களுக்கு வழிகாட்டுவதை ஒரு கடமையாகக் கருதுபவர் கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள் என்றால், கொஞ்சம் புத்தியும், கடுகு மூக்கு அளவுக்கு ஒழுக்கமும் உள்ளவர்கள் அவற்றை வரவேற் பார்கள்.
அப்படியானால் இப்படி சொல்பவர்களை, எழுதுபவர்களைக் கொச்சைப்படுத்துபவர் களைப் பொதுமக்கள்தான் அடையாளம் காணவேண்டும்.
வீரமணிக்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் - மற்றவர் களுக்கு? என்று கேள்வி கேட்டுள்ளார்.
கேள்வி கேட்பவருக்கு - கடவுள் நம்பிக்கை இருந்து தொலையட்டும் - அந்தக் கடவுள் நம்பிக்கை குறைந்தபட்சம் ஒழுக்கத்தின் அடிப்படையில் இருக்கவேண்டாமா என்பது தான் நமது கேள்வி.
மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள யோக்கி யதை உடையவன் கடவுள் என்று அவர் ஏற்றுக்கொள்கிறாரா? என்பதுதான் கேள்வி.
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்கிறார் இவர்கள் போற்றும் கிருஷ்ணன் என்ற கடவுள் (கீதை அத்தியாயம் 9; சுலோகம் 32).
ஆதாரத்தோடு திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் கீதையின் மறுபக்கம் எனும் தலைப்பில் எழுதப்பட்டது 1998 இல். அதற்குப் பின் பல பதிப்புகளும் வெளிவந்துவிட்டன. தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் வெளி யிடப்பட்டுள்ளது (Bhagavad Gita Myth or Mirage?).
அதற்கு இதுவரை எந்த ஒரு கொம்ப னாலும் மறுப்பு எழுதப்பட முடியவில்லை. எழுத முடியாத கோழைகள் கொம்பேறித் தாவிக் கொரிக்கிறார்கள்.
கீதையில் பகவான் கிருஷ்ணன் எத்த னையோ வாழ்க்கைத் தத்துவங்களையெல்லாம் கூறியிருக்கிறாராம்.
கீதை ஒரு கொலை நூல் - கீதையின் சுலோகத்தை எடுத்துக்காட்டித்தான் காந்தி யாரைப் படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ். காரனான நாதுராம் கோட்சே நீதிமன்றத் திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளான் என்ற அரிச்சுவடி தெரியுமா தமிழக அரசியல் எழுத்தாளருக்கு.
சரி.... அவர் விவாதப்படியே கீதையில் நல்ல விடயங்கள் சொல்லப்பட்டதாக வைத்துக் கொள்வோம். ஒரு கேள்வி அந்த எழுத்தா ளருக்கு.
தாட்டு இலை போட்டு, பத்து வகைப் பதார்த் தங்களைப் பரிமாறி, அதன் ஒரு மூலையில் மலத்தை வைத்து இருந்தால், பரவாயில்லை - இத்தனை வகைக் கறிகளை பிரமாதமாக சமைத்திருக்கிறார்கள் - ஓரத்தில்தானே மலம் இருக்கிறது என்று எண்ணி, வயிறு முட்ட சாப்பிடுவார்களா?
கேள்விக்குப் பதில் எழுதிய வெறும் சோற்றுத்துருத்திகள் சாப்பிட்டாலும் சாப் பிடுவார்கள் - யார் கண்டது?
திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டி யுள்ள பகுதி ஏதோ அலட்சியப்படுத்தக் கூடிய பகுதியும் அல்ல!
கீதையின் அடிப்படைத் தத்துவமே வருணப் படைப்புதான்!
நான்கு வருணங்கள் என்னால் உண் டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங் களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது (கீதை அத்தியாயம் 4; சுலோகம் 13).
அதன் அடிப்படையில்தான் கீதை அத்தி யாயம் 18; சுலோகம் 44 இல்
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று இவர்கள் நம்பும் பகவான் கிருஷ்ணன் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
பாவ யோனியில் பிறந்ததாக, ஏதோ கிருஷ்ணன் பிரசவம் பார்த்ததுபோல எழுது கிறானே - அதைச் சொன்னால் வீரமணியின் தரத்தைப்பற்றி எழுதுகிறாரே - அவர் தரத்தைப்பற்றி எழுதுவதற்கு பெண்களின் புடவைகளைத் திருடும் கடவுளை கும்பிடும் தரம் உள்ளவர்களா தகுதி உடையவர்கள்?
பதில் எழுதியவர் இதில் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்? பார்ப்பனராக இருந்தால் - இன் றைக்கும் அவர்கள் மற்றவர்களை இழிவு படுத்துவதில் ருசி காண்பவர்களாக இருக் கிறார்கள் என்று பொருள்.
பார்ப்பனர் அல்லாத சூத்திரராக இருந் தால் வெட்கப்படவேண்டாமா? நமது தாயைக் கொச்சைப்படுத்தி கிருஷ்ணன் சொல்லி யிருக்கிறானே என்று ஆத்திரப்பட்டு இருக்க வேண்டாமா - சொரணை இருந்தால்!
திராவிடர் கழகத் தலைவர் எழுதியதில் என்ன தவறு?
உண்மையைத்தானே எழுதி இருக்கிறார் என்று பதில் எழுதி இருக்கவேண்டாமா?
வீரமணி அவர்களின் தரம் உலகம் அறிந்தது. தந்தை பெரியாரால் தட்டிப் பார்க்கப்பட்ட பொறுக்குமணி அவர். அவரைப்பற்றி தரக்குறைவாக எழுதி தன் தரத்தைக் காட்டியுள்ளார்.
சூத்திரன் என்றால் என்ன பொருள் என்று எழுத்தாளருக்குத் தெரியுமா? (எதையும் படிக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக பேனா பிடித்தால் நாம் என்ன செய்வது?).
சூத்திரன் என்பவன் ஏழு வகைப்படும்:
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்
2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன்
3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்கிறவன்
4. விபசாரி மகன்
5. விலைக்கு வாங்கப்பட்டவன்
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
7. தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8; சுலோகம் 415).
என்னை விபச்சாரி மகன் என்று சொன்ன தைப்பற்றி எனக்குக் கவலையில்லை - அதே மனுதர்ம சாஸ்திரத்தில் நல்லவை ஏராளம் கூறப்பட்டுள்ளன என்று எழுதட்டுமே பார்க் கலாம். (யார் கண்டது? ஆசாமி எழுதினாலும் எழுதுவார்).
பெரியார் எவ்வளவோ பகுத்தறிவு சீர் திருத்த வாதங்களை சமூகத்திற்கு அளித்தார் என்றும் எழுதியுள்ளார் - திராவிடர் கழகத் தலைவரை இழிவுபடுத்தவேண்டும் என்றால் பெரியாரைப் பெருமைப்படுத்துவது என்பது ஒரு தந்திரம் அவ்வளவுதான்.
சரி... எவ்வளவோ நல்லதைப் பெரியார் சொல்லி இருக்கிறாரே - இந்த ஏடு பெரியார் சொன்ன அந்த உயர்ந்த கருத்துகளை வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறதா? பெரியார் சொன்னதைவிட மிகப்பெரிய விஷ யங்களைத் தான் வெளியிட்டு மக்களுக்குப் பெரிய உதவியைச் செய்துகொண்டு இருக்கிறதா?
தாழ்த்தப்பட்டவர்கள்பற்றி பெரியார் சொன்னதாக அவதூறு கிளப்பியுள்ளதே (இதுதான் பெரியாரை மதிக்கும் செயலா?). அதற்கு என்ன ஆதாரம்?
நாம் எழுதுபவை அத்தனைக்கும் ஆதாரத் தைக் குறிப்பிடுகிறோம். அறிவு நாணயம் இருந் தால் அடுத்த இதழில் பெரியார் சொன்னதற் கான ஆதாரத்தை வெளியிடட்டும் பார்க்கலாம் - சவால் விட்டுக் கேட்கிறோம்.
இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் விபீஷணப் பரம்பரை வளர்ந்து வருவதுதான் என்று தந்தை பெரியார் எழுதினாரே - (விடுதலை, 17.9.1969) அதுதான் நினைவிற்கு வருகிறது.
மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு என்றார் தந்தை பெரியார். மானத்தைப்பற்றி கவலைப்பட்டிருந்தால் நமது தாயை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையில் உள்ளதை திராவிடர் கழகத் தலைவர் குறிப் பிட்டதற்கு நன்றி சொல்லவேண்டும்.
பெரியார் திடலுக்கு ஓடோடி வந்து வணக்கம் தெரிவித்திருக்கவேண்டும்.
அறிவைப் பயன்படுத்தி இருந்தால் ஆதா ரத்தோடு அல்லவா எழுதியிருக்கிறார் என்று சிந்தித்திருக்கவேண்டும். இரண்டும் இல்லாத துகள் தரத்தைப்பற்றி எழுதுவது கண்டு வாயால் சிரிக்க முடியவில்லை.
குறிப்பு: இதுபோன்ற ஏடுகளின் யோக்கி யதையைத் தமிழர்கள் தெரிந்துகொள்ளட்டும்!
==தங்களின் வருகைக்கு நன்றி==
பேரறிஞர் அண்ணாவின் அழைப்பு!
மாணவர்கள் காளைப் பருவத் தவர்; கலை பயிலும் நிலையினர்; நாட்டின் நரம்புகள்; விலையிலா மாணிக்கங்கள்; நாட்டின் ஈட்டி முனைகள்.
வாலிபர்கள் நடமாடும் எஃகு கம்பிகள், அகத்திலே அருவி போல ஆர்வம், முகத்திலே வீரக்கலை, செயலிலே துடிதுடிப்பு காணப்படும்.
தலைகுனிந்து நிற்பது, பெருமூச்சு விடுவது, நம்மால் ஆகிற காரியமா? என்று இழுத்துப் பேசுவது ஆகிய முறைகள் அவர்களுக்குப் பிடிக்காதன. அவர்கள் செயலாற்றும் வீரர்கள்
மாணவர்களைப் பற்றிய, இளை ஞர்களைப் பற்றிய அறிஞர் அண்ணா வின் வரையறை இது. மாணவர்களும், இளைஞர்களும் ஏற்படுத்திய எழுச்சி தான் 1967-இல் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற் படுத்தியது. நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை தூக்கியெ றிந்து - தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. அரசியல் ஆர்வத்தைக் காட்டிலும், பதவி மோகத்தைக் காட்டிலும், பெரியது - முக்கியமானது - அவசியமானது. சமுதாயப் புரட்சிப் பணிகளே என்பது அறிஞர் அண்ணாவின் எதிர்பார்ப்பு.
வீரம் ததும்பும் வாலிபர்களின் உணர்ச்சி செல்வம் இருக்கிறதே அது வெள்ளத்தால் அழியாது - வெந் தணலால் வேகாது; கொடுத்தாலும் நிறைவுறுமேயன்றி ஒரு நாளும் குறையாது. அந்த செல்வம் நம்முடன் ஏராளமாக இருக்கிறது என்று நம்பிய அண்ணா வாலிபர்கள் உரி மைப் போர்ப்படையின் ஈட்டிமுனைகள்; அவர்தம் உள்ளத்தில் புரட்சிப் புயலிருக்கும். வாழ்க்கை என்னும் பொய்கையிலே விசாரம் என்னும் நச்சு கலக்கப்படாத பருவம். பகுத்தறிவு என்னும் பகலவன் வெளிச்சத்தில் விஷப்பூச்சிகள் போன்ற சுயநலக் கருத்துக்கள் அழிக்கப்பட்டு இருக் கும். தூய்மையான அந்த வாலிப உள்ளங்களில் சந்தனக்காட்டைக் கடந்து மணமும், குளிர்ச்சியும் மருகி மக்களை மகிழ்விக்க வருகிறதே தென்றல் அது போன்றது வாலிபம்.
மாயாவாதமும், மனமருட்சியும் வாலிபர்களிடம் நெருங்க நடுங்கும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரம் - வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்ற வீரம் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், அநீதியைக் கண்டால் கொதித் தெழுந்து தாக்கும் பண்பு வாலிபர் களிடையே மிகுந்திருக்கும்.
சும்மாயிருப்பதா நாம் என்ன சொரணையற்றவர்களா? புறப்படு... போரிடு... அநீதி அழியுமட்டும், அல்லது நாம் அழியும் வரை போர்... இந்தப் பேச்சுதான் வாலிபர் செவி ஏறும் என்று பறைசாற்றி சமுதாயப் போருக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. அதற்கான ஆர்வமும், உற்சாகமும், உணர்வுகளும் இளைஞர் களிடம் இருப்பதாக எண்ணினார்.
மனித சுதந்திரம், ஜாதீய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை, சமுதாயம் பெற்றிட இளைஞர்களின் படை அணிவகுக்க வேண்டும். ஆர்ப் பரித்து தோள்தட்டி பெரியாரின் பெரும்படையிலே தன்னை இணைத் துக் கொண்டு புதிய மாற்றத்துக்காக, மறுமலர்ச்சிக்காக செயலாற்றிட வேண் டும் என்பதை பேரறிஞர் அண்ணா குறிப்பிடும்போது
சுதந்திரம், விடுதலை என்றால் சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல வாலிபன் எண்ணுவது. புதிய நிலை, புது அழகு, புது உருவம், புதிய மகிழ்ச்சி, நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான். உண்மையும் அது தான்!
வைதீகம் என்னும் நோய்க்கு டாக்டர்கள் மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது, பின் யாரால் அந்த நோயைப் போக்கடிக்க முடியும்? வாலிபப்பருவத்தில் உள்ள மாணவர் களால் தான் முடியும். பகுத்தறிவு என்னும் ஒரே மருந்தால் தான் வைதீ கம் என்னும் நோயைப் போக்கடிக்க முடியுமே தவிர வேறு எந்த மருந்தா லும் போக்க முடியாது என்ற அண் ணாவின் கணிப்பு எந்த அளவு நிதர்சனமானது!
பகுத்தறிவை - சுயமரியாதைக் கருத் துக்களை பரப்புவது என்பது சாதாரண மான பணியல்ல. சருக்கு மரத்தில் ஏறுவ தற்கு ஒப்பானது. இமயமலை வெயிலில் காய்கிறது என்பதற்காக குடைபிடிப்பது போன்ற காரியம். அஞ்சா நெஞ்சம் படைத்த இலட்சியவாதிகளால் தான் இந்தப் பணியிலே வெற்றியை ஈட்ட முடியும். பெரியாரின் தொண்டர்கள் என் பவர்கள் சீரிய இலட்சியவாதிகள்தான். நாட்டின் ஒப்பற்ற செல்வங்கள்தான். அதனால்தான் பேரறிஞர் அண்ணா அஞ்சா நெஞ்சு படைத்த இலட்சிய வாதிகள் தாம் ஒரு நாட்டிற்குக் கிடைக் கக்கூடிய ஒப்பற்ற செல்வங்கள் என்றார்.
புரட்சி என்பது இயங்கும் சக்தி! அதைப் பொசுக்கிவிட யாராலும் முடியாது. புரட்சி என்பது மக்களின் போராடும் சக்தியின் வழிவருவது
புரட்சி வாலிபத்தின் கூறு! பகுத்தறி வாளர் ஆயுதம்! பழமை விரும்பிகள், புரட்டர்கள், எதேச்சதிகாரிகள், சர்வாதி காரிகள் ஆகியோருக்கு நஞ்சு என்ற அண்ணாவின் கருத்துப்படி வாலிபத்தின் கூறாகிய புரட்சிப் பணியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். பகுத்தறிவுப் புரட்சிப் பணியில், ஜாதி ஒழிப்பு எனும் புரட்சிப் பணியில், மத ஒழிப்பு எனும் புரட்சிப் பணியில், மூடநம்பிக்கை ஒழிப்பு எனும் புரட்சிப்பணியில், பெண்ணடிமை ஒழிப்பு எனும் புரட்சிப் பணியில் இளைஞர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும்.
புதுமை மலர - புரட்சி ஓங்கிட வேண் டும். மறுமலர்ச்சி காண புரட்சி வழி வகுக்கும். மடமை இருட்காட்டிலிருந்து மக்களை மீட்டு புதுயுகம் காணச்செய்ய புரட்சி தேவை. சமுதாயப்புரட்சி தேவை. அதற்குரிய மருந்து பெரியாரின் கொள் கையே! பெரியாரின் இயக்கமே அந்த மருந்தை மக்கள் மயப்படுத்தும். புதுமையும், பொதுமையும் மக்களை சமப்படுத்தும். அனைத்து நிலை ஒடுக்கு முறையிலி ருந்தும் மக்களை மீட்க திராவிடர் கழகத்தின் ஓயாத போர்முறையில் ஒப்பற்ற வீரர்களாக இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திட வேண்டும்.
திராவிடர் கழகத்தில் இணைந்து தொண்டர்களாக, தோழர்களாக இளை ஞர்கள் பரிணமிக்க வேண்டும். இயக்கப் பணி ஆற்றுவதில் இன்பம் காண வேண்டும். காரணம் இனத்தின் இன்பம் - மகிழ்ச்சி இயக்கத்தால் மட்டுமே சாத்தியம். கடமை உணர்ச்சிமிக்க காவலர்களாக இளைஞர்கள் இயக்கப் பணியாற்றி தமிழர் சமுதாயத்தைக் காத்திட வேண்டும் என்பதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா சிறப்பாக எடுத்துரைக்கிறார் பாருங்கள்.
கட்சிப் பணியும், களத்துப்பணி போன்றே! வீரருக்கு ஏற்றதே அன்றி, விலாவிலே விரக்திப் புழு நடமாடுவோருக்கோ, மனதிலே சுயநலம் எனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறுசெயல்புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தல் அரிது. கட்சிப்பணிக்கு இத்தகைய கடமை உணர்ந்த காவலர் தேவை என்கிறார்.
கோயில்களிலே உள்ள ஆயிரங்கால் மண்டபங்கள் எல்லாம் கல்விச் சாலை களாய், ஆராய்ச்சி நிலையங்களாய் மாறினால்,
நூற்றுக்கால் மண்டங்கள் எல்லாம் நூல் நிலையங்களாய், வாசக சாலை களாய் மாறினால், மக்கள் மடமையி னின்றும், விடுபட்டு மதியைப் பெறுவது எத்துணை எளிது என்று சிந்தியுங்கள் தோழர்களே! என்ன அற்புதமான மாந்தநேய சிந்தளை அண்ணாவிடம்!
நாடு முழுவதும் எத்தனை எத்தனை கோயில்கள், எத்தனை எத்தனை ஆயிரங்கால், நூற்றுக்கால் மண்டபங்கள், மோட்ச குளங்கள், புனித நீராடும் நீர்நிலைகள்... மக்களின் உழைப்பும் நேரமும் எவ்வளவு பாழ்படுத்தப்பட்ட அவலங்கள்!
இதோ இன்னமும் பேரறிஞர் பெருந்தகை பேசுவதைப் பாருங்கள் ஏழை மக்கள் மனம் குமுறிக் கிடக்க கடவுளுக்கு குடமுழக்குகள் நடைபெறு கின்றன. பசிக்கு உணவில்லை; இருக்க இடமில்லை. வாழ வசதியில்லை மக்களுக்கு!
ஆனால் ஆண்டவனுக்கு கோயில் திருப்பணி, குடமுழுக்குகளுக்குக் குறை வில்லை.
ஏழை ஏங்கித் தவிக்க எம்பெருமான் ஏற விதவிதமான வாகனங்கள் தேடு கிறார்கள்.
வயிறார உணவில்லை; ஆனால் வைரமுடி வேங்கடத்தானுக்கு!
இந்நிலை பற்றி எவர் கவனிக்கின் றனர். படித்த கூட்டம் பதவியிலும், பரமன் அருளிலும் மூழ்கிக் கிடக்கிறது. பாமரரோ பரிதவிக்கின்றனர் பசியால்!
இந்நிலை அகற்றப்பட வேண்டும். இல்லாதோர் வாழ்வில் ஏற்றம் கிடைக்க வேண்டும். பஞ்சமும் பசியும் அகல வேண்டும். பாரோர் பரம திருப்தியாய் வாழ வேண்டும் என்று எந்த பக்தனாவது சிந்தித்தானா? மக்கள் சுபிட்ச வாழ்வு வாழ வேண்டும் என்று மக்கள் நலப் பணிகளில் பக்த கே()டிகள் ஈடுபடுவதுண்டா? வறுமையை ஒட்டி வளமையை மக்களுக்கு வழங்கிட கோயில் திருப்பணி செய்வோர் முயற் சித்ததுண்டா?
நாத்திக இயக்கமான - மனிதநேய இயக்கமான திராவிடர் கழகம் பக்தர் களின் வழிபாட்டுரிமைக்கும், சமூக நீதிக்கும் போராடி உரிமையைப் பெற்று கொடுக்காது போயிருந்தால் நிலமை என்னவாகி இருக்கும்?
பக்தி சிகாமணிகளைப் பார்த்து பகுத்தறிவுப் பகலவனின் தளபதியாம் அண்ணா விடுக்கும் அறிவார்ந்த வினாவை படியுங்கள்:
பக்திமான்கள் எவராவது இந்த நாட்டிலே தெய்வம் கொழித்திருக்க, எம்பெருமானுக்கு எல்லையற்ற திருக் கோயில்கள் எழுப்பப்பட்டு, அன்றாடம் ஆறு கால பூஜை தவறாது நடந்துவர, அதற்கென மலைபோல் செல்வம் முடங்கிக் கிடக்க, இத்தனை குடும் பங்கள் மண்ணோடு மண்ணாய் பசியால் வாடி மடிகின்றனவே என்பதை நினைத்ததுண்டா? நெஞ்சிலே ஈரம் இருந்து கை வைத்துச் சொல்ல துணி வுண்டா? அவ்வேழை மக்களின் பரிதாப நிலையைப் பாடினதுண்டா? பாடிப்பா ரோரின் பகுத்தறிவுக்குச் சிந்தனை தந்ததுண்டா? வறுமையை மீட்க வழிகோலினதுண்டா?
அண்ணாவை அரசியல் பதவிக்குப் பயன்படுத்துவோரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய வினாக்கள்தான்!
அண்ணாவின் உருவம் கொடியிலே, கட்சியின் பெயரிலே மட்டும் இருந்தால் போதுமா? அவரின் அர்த்தமுள்ள பகுத்தறிவுச் சிந்தனையை கருத வேண்டாமா? அரசியலாளரிடம் அதை யெல்லாம் எதிர்பார்க்க கூடாதோ!
பகுத்தறிவு ஒளிப்பாய்ச்சல் மூலம் தந்தை பெரியார் மூட்டிய அறிவுத் தீ அறியாமைக்கு எதிராக மளமளவென பற்றுவதைப் பாருங்கள் இளைஞர்களே! தமிழர் தலைவராம் ஆசிரியர் அழைக்கிறார். ஈரோடும் காஞ்சியும் தமிழர்களின் மானங் காக்கும் மண் மட்டுமல்ல. மகத்தான பகுத்தறிவின், தன்மானத்தின் இரு கண்கள், மடமையை மாய்த்து இனம் செழித்திட, தமிழர் நாடு அறிவு வழியில் நடைபோட, சமத்துவ நெறியில் சமுதாயம் அமைந் திட ஓயாதுழைக்கிறார் தமிழர் தலைவர். இளைய தலைமுறையே எழுந்து வா! இயக்கத்தில் உன்னை இணைத்துக் கொள். தந்தை பெரியார் பணி முடிக்க தீயாய் உழைத்திட உறுதி கொள்!
பேரறிஞர் அண்ணாவின் அன்புக் கட்டளை - ஆசை மொழிகள் இதோ.. படியுங்கள் - பாரோர் வியக்க செயலாற் றுங்கள் தோழர்களே! எது முறையோ அதன் வழி நடவுங்கள்.
அறிவுக்கு ஒத்ததைக் கொள் ளுங்கள்.
எதிர்ப்புக்கு அஞ்சாதீர்.
மதத்தின் முன் மண்டியிடாதீர்.
மானமே மனிதனை மனிதனாக்கு கிறது என்பதை உணருங்கள்.
உலுத்தர் பேச்சை உதறித் தள்ளுங்கள்.
சமத்துவம் நாடுங்கள்.
சகோதரத்துவம் கோருங்கள்.
ஜாதி - மத பேதத்தைச் சாடுங்கள்.
தோல்வி கண்டு சலிப்புறாதீர்கள்.
மாற்றார் மமதை கண்டு மனம் மருளாதீர்கள்.
சிந்தித்து முடிவுக்கு வாருங்கள்
அதன்வழிச் செயலாற்றுங்கள்!
==தங்களின் வருகைக்கு நன்றி==
அ.தி.மு.க. அரசின் கல்வித்துறை குறித்து கலைஞர் கருத்து
கேள்வி :- அ.தி.மு.க. அரசின் கல்வித் துறை எப்படித்தான் செயல்படுகிறது? முதுகலை தமிழாசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடையாணைப் பிறப்பித்திருக்கிறதே?
கலைஞர் :- இரண்டாண்டு காலத்தில் நான்கு கல்வி அமைச்சர்கள் பணியாற்றினால் இந்தக் கதி தான்! கடந்த 21-7-2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது. அத்துடன் இணைந்து முதுகலைத் தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வும் நடை பெற்றது. 2,881 பணி இடங்களுக்கான இந்தத் தேர்வை ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேர் எழுதினார்கள். 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் 605 பேர் மட்டும் தமிழ்ப் பாட ஆசிரியர்கள். அப்போது வழங்கப்பட்ட கேள்வித் தாளில் 150க்கு 47 கேள்விகளில் அச்சுப் பிழை இருந்ததாம். இதுகுறித்து விஜயலட்சுமி என்பவர் தொடுத்த வழக்கில் நீதியரசர் நாகமுத்து அவர்களிடம் கேள்வித்தாள் நகல் ஒன்றே கொடுக்கப்பட்டு, அவரும் அதைப் படித்துப் பார்த் திருக்கிறார். கேள்வித்தாளில் கணியன் பூங்குன்றனார் என்பதற்குப் பதிலாக கனியன் பூதுகுன்றனார் என்றும்; இளங்கோவடிகள் என்பதற்குப் பதிலாக இளது கோவடிகள் என்றும்; ஔரங்கசீப் என்பதற்குப் பதிலாக ஔரதுசீப் என்றும்; காங்கிரஸ் என்பதற்குப் பதிலாக காதுரஸ் என்றும்; கங்கை கொண்ட சோழன் என் பதற்குப் பதிலாக கதுகைகொண்ட சோழன் என்றும் அச்சிடப்பட்டிருந்ததாம். அதைப் பார்த்து விட்டு நீதியரசர் அவர்கள், இதுபோன்று ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் ஆசிரியர் பணிக்கான கேள்வித்தாள் தயாரித்திருப் பதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும். தமிழ் மொழி, செம்மொழி அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கும் நிலையில், இதுபோன்று தவறுகள் நடந்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறிய தோடு, முதுகலைத் தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். அதாவது தமிழ் தவிர மற்ற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிபதி அனுமதித்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் தரவேண்டுமென்றும் தெரிவித்திருக் கிறார். வழக்கு விசாரணை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகே தமிழ்ப் பாடத் துக்கு மறு தேர்வு நடக்குமா, இல்லையா என்பது தெரிய வரும். இதெல்லாம் இந்த ஆட்சியினருக்குக் கிடைத்த சான்றிதழ்கள் தானே?
==தங்களி வருகைக்கு நன்றி==
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)

