Social Icons

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

பெரியாரின் எண்ணத்தால் தமிழகமெங்கும் உதித்த பாடசாலைகள் அறந்தாங்கி கழக மாவட்டம் ஆலங்குடியில் இடி முழக்கம் தஞ்சை இரா.பெரியார்ச் செல்வம், விளக்க உரை.

அறந்தாங்கி கழக மாவட்டம் ஆலங்குடியில் தந்தை பெரியார் 135வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், 11.09.2013 புதன் கிழமை அன்று மாலை 6மணிக்கு நடைபெற்ற, கூட்டத்தினை ஒன்றிய தி.க செயலாளர் குப்பகுடி இரா.இளங்கோ தலைமையேற்றார். மாவட்ட தி.க தலைவர் பெ.இராவணன், மாவட்ட தி.க செயலாளர் க.மாரிமுத்து முன்னிலை ஏற்றனர், நெடுஞ்செழியன் வரவேற்புரையேற்றார் இடி முழக்கம் தஞ்சை இரா.பெரியார்ச் செல்வம், நீண்டதொரு விளக்க உரையாற்றினார்.

அவர் பேசுகையில் தந்தை பெரியாரைப்பற்றி நான் அதிகம் விளக்க தேவையில்லை, இன்றைய பள்ளிப் பாடத்தில் ஏ பார் ஆப்பிள், பி பார் பால், சி பார் கேட் என்று குழந்தைகள் படிகிறார்கள் ஆனால் நாற்பது அம்பது ஆண்டுகளுக்கு முன் பாடப்புத்தகத்தில்  இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான், இவன் தச்சன் மரவேலை செய்கிறான், இவன் வண்ணான் துணி துவைக்கிறான், இவன் பரையன் பறைசாற்றுகிறான் கடைசியில் பார்பான் ஒருவன் சிண்டுமுடிந்து பூனூல் போட்டுக்கொண்டு புத்தகத்தை பார்த்துக் கொண்டிருக்கும் படத்தை இவர் அய்யர்....... பாடம் படிக்கிறார். என்று இருந்த நிலையை, எம்.எல்.ஏ வந்து மாற்றினாரா, எம்.பி வந்து மாற்றினாரா? நண்பர்களே, தந்தை பெரியாரின் கடும் போராட்டத்தால் இந்த நிலை மாறியது அதன் விளைவாக குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்டு கல்வி வள்ளல் காமராசர் முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது நாடெங்கும் கல்வி நீரோடை பாய்ந்தது, 300பேர் ஒரு ஊரில் இருந்தால் அங்கு ஒரு ஆசிரியர் பள்ளி திறக்கப்பட்டது என மேலும் பல சுவையான வரலாற்றுச் செய்திகளை விளக்கிக் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட தி.க இளைஞரணித் தலைவர் ப.மாகாராசா, மாவட்ட தி.க இளைஞரணித் துணை தலைவர் குழ.சந்திரகுமார் தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர்  சோம.நீலகண்டன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணித் தலைவர்  சித்தாதிக்காடு பொறியாளர் இரா.கதிர்வேல் அறந்தாங்கி மாவட்ட தி.க துணைத் தலைவர் கறம்பக்குடி முத்து, மாவட்ட தி.க அமைப்பாளர் அ.தங்கராசு, புதுக்கோட்டை யிலிருந்து தங்கவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

கூட்டத்தினை ஏராளமானோர் கேட்டு பயன்பெற்றனர் சிறப்பாக உரையாற்றிய, இரா.பெரியார் செல்வம் அவர்களை பொதுமக்கள் நேரில் வந்து பாராட்டினர். கூட்டம் 8.30க்கு முடிவுற்றது துரை.குமார் நன்றி கூறினார்.

==தங்களின் வருகைக்கு நன்றி==

கோயில் தங்கங்களை அரசு எடுத்துக் கொள்வதுபற்றி ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த வரலாற்றுச் சின்னங் களுள் 92 சின்னங்கள் காணப்படவில்லை என்று கூறப்படுகிறதே?

பதில்: இதுவரை கடவுள் - கடவுளச்சிகள் தான் நம் நாட்டில் காணாமற் போய்க் கொண்டிருந் தார்கள். இப்போது இவையும் அந்தப் பட்டியலில் சேருகிறதா? என்னே கொடுமை! கடும் நடவடிக்கை தேவையே!

கேள்வி: அயோத்தியைச் சுற்றி 252 சதுர கிலோ மீட்டர் பரப்பு எங்கள்  கலாச்சார எல்லை என்று வி.எச்.பி. பொதுச் செயலாளர் பிரவின் தொகாடியா கூறியுள்ளதுபற்றி...
- கே. ஜகாங்கீர், தாராபுரம்

பதில்: வீண் வம்பை விலைக்கு வாங்கி கலவ ரத்திற்குத் தூபம் போடும் அதிகப் பிரசங்கித்தனம்! அதென்ன கலாச்சாரம்! அது என்ன எல்லை?  அட மதவெறியர்களே! பதவியில் இல்லாதபோதே - இப்படி ஒரு வீம்பா?

கேள்வி: விவாகரத்து பெற்றாலும் பெண் ணுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு தரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் சட்டம் சரியானது தானே?
- கா. மல்லிகா மணியரசன், திருநாவலூர்

பதில்: வரவேற்கப்பட வேண்டிய சட்டம் அது!

கேள்வி: கோயில் தங்கங்களை அரசு எடுத் துக் கொள்வதுபற்றி... - திரு.தேவி, அதிராம்பட்டினம்

பதில்: புத்தியும், துணிவும் இருந்தால் அரசு அதைச் செய்யும். திருப்பதி - திருவனந்தபுரம் போதுமே!

கேள்வி: அழகும் - ஆபாசமும் ஒன்றா? - காவேரி சொர்ணம், மதுரை- 2

பதில்: வெளிச்சமும், இருட்டும் ஒன்றா?  சில நேரங்களில் வெளிச்சத்தைச் சுற்றி இருட்டும் இருக்கும்!

கேள்வி: கிருஷ்ணனைப் பற்றி தாங்கள் எழுதிய அறிக்கைக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதே? - துரை. தேசிங்கு, தேவிபட்டினம்

பதில்: மருந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளது என்பதை அறிய மகிழ்ச்சி பொங்குகிறது!

கேள்வி: இந்திய அரசுப் பணிகளில் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும்

14.11 சதவீதம் மட்டுமே என்பது எதைக் காட்டுகிறது? - மா. சேகரன், சென்னை-112

பதில்: பிற்படுத்தப்பட்ட மக்களின் இளிச்ச வாய்த்தனத்தையும், மத்திய அரசு ஆதிக்க ஜாதியினர் வசமே 66 ஆண்டு கால சுதந்திரத்திற்குப் பின்னும் அடிமையாகவே உள்ளது என்பதையும் காட்டுகிறது!

கேள்வி: இன்றைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்னும் ஏணியைத் தேர்தலில் பிஜேபி பயன்படுத்திக் கொள்ளுமோ? - தி. விஜயா, வழக்குரைஞர், சென்னை-40

பதில்: திருமண வீட்டிலேயே ஒப்பாரி சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் இழவு வீடு கிடைத்தால் சும்மா இருப்பார்களா?

கேள்வி: இந்திய மொழிகள் அனைத்தும் இந்தியா வின் ஆட்சி மொழி என்பது - ஒரு பிரச்சினையாக இந்தியாவில் இல்லையோ? - ஆறு. குழந்தைவேலன், தூத்துக்குடி

பதில்: முக்கிய பிரச்சினைதான்! பிரச்சினைகள் நாளும் பெருகி வருவதால் இது அழுங்கிக் கிடக்கிறது போலும்!

கேள்வி: தொலைக்காட்சி வந்தபின் வானொலி யின் முக்கியத்துவம் குறைந்து விட்டதே? - தெ. கு.மாறன், வானகரம்

பதில்: உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய செய்தி இது; வானொலி அறிவு கொளுத்தும் அளவுக்கு தொலைக்காட்சிகள் செய்வதில்லை; வானொலி தரம் தாழாமல் உள்ளது. மக்களுக்கு ஓரளவாவது பயன் படுகிறது.

==தங்களின் வருகைக்கு நன்றி==

பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு

தமிழகத்தில் சமயக்குரவர்களுக்கு முன்பு மிகச்சொற்பமாக வைதீக மதத் தாரும்,   சைவம் மற்றும் வைணவம் இருந்து வந்தது, சமணமும், பவுத்தமும் சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை புழக்கத்தில் இருந்தன. சமயக்குரவர்களின் எழுச்சி யால் சைவமும் ஆழ்வார்களால் வைண வமும் எழுந்து சமண பவுத்த மதங் களை அழித்துவிட்டன, அந்த மத பள்ளிகளும், விகாரைகளும் சைவம் (திருப்பரங்குன்றம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை) மற்றும் வைணவ (அழகர்கோவில், தல்லாகுளம்) தலங் களாக மாற்றப்பட்டன.  அதிகார மய்யத்தின் மதமாற்றத்திற்கு பெண்கள் பெரிதும் காரணமாக இருந்ததை அனைத்து வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. சமண, சமய தலைநகரமாக விளங்கிய மதுரை சைவ சமய உறைவிடமாக மாறியதற்கு முக்கிய காரணம்  கூன்பாண்டியனின் மனைவி யான மங்கையர்க்கரசி என்ற மானி என்ற கோப்பெருந்தேவியார்  சோழச் சக்ரவர்த்தியின் மகளாவார், சைவ, வைணவ சமயங்கள் செழித்திருந்த காலத்தில் மன்னர்கள் நேரடியாக கோவிலின் உள்ளறைக்கு சென்று விக்ரகங்களுக்கு பூசைகள் நடத்தினர், இதற்கான எடுத்துக்காட்டாக கூன் பாண்டியனின் மனைவி தனது கையாலேயே அர்ச்சித்த மலர்களை பெண்டிருக்கு கொடுத்தார் என்ற பதிவே இதற்கு உதாரணமாக காண லாம், இதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சைவ வைணவ மதங்கள் அதிகாரம் மற்றும் செல்வம் சேர்க்கும் ஆசையின் காரணமாக தங் களுக்குள் போட்டியிட ஆரம்பித்தனர். மத நம்பிக்கையில் அதீத பற்று கொண்ட மன்னர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் யாகசாலைகள் மட்டும் கட்டிக்கொண்டு புரோகிதம் பார்த்த வைதீக பார்ப்பனர் தங்களது ஆதிக் கத்தை நிலை நிறுத்த திட்டமிட்டனர். இக்காலகட்டத்தில் வடக்கே மெல்ல மெல்ல முகமதிய மன்னர்களின் ஆளுமை துவங்கிய பிறகு பார்ப்பனர்கள் கோவில் தொடர்பான பணிகளை விட முகமதியமன்னர்களின் கையாள்களாக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டனர். இதே நேரத்தில் தக்காண பீடபூமியில் முக்கியமாக சாளுக்கியர் மற்றும் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பார்ப்பனர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி குடும்பமாக இடம்பெயர்ந்தனர். இதை தஞ்சைபல்கழைக்கழகத்தில் உள்ள பல செப்பேடுகள் உறுதி செய்கின்றனர்.

இவர்களின் பலர் ஆதிசங்கரரின் ஒன்றுபட்ட அத்வைத முறையை கற்றுக் கொண்டவர்கள், ஆதிசங்கரர் வைதீகத்தில் இங்குள்ள அனைத்து மதக்கொள்கையையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தார், இது சனாததன விதிகளின் படி இருந்ததால் வடக்கிலும் பிரபலமானது, முகமதியர்களின் அதிகார ஏஜெண்டுகளாக உருமாறி யிருந்த வடக்கத்திய பார்ப்பனியம் இதை முழுமையாக் ஏற்றுகொண்டது, இங்கிருந்து தான் பார்ப்பனர்கள் மாமிசம் கைவிடும் கொள்கை ஆரம்ப மானது.  இதை தீவிர சனாதனிகளான அகோரிகளும், வங்கப்பார்ப்பனர்களும் சாளுக்கிய ஆளுமைக்குட்பட்ட சில பார்ப்பனக்குழுக்களும் எதிர்த்தனர்.    தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப் பனர்கள் ஆதிசங்கரரின் அத்வைத முறையை பரப்பி முதல்முதலாக ஆலயங்களுக்குள் ஆலோசகர்களாக நுழைந்தனர். காலம் 8ஆ-ம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இந்த 300 ஆண்டு காலத்தில் மிகபெரும் மாறுதல்களை தமிழகம் (மதவரலாற்றில்) காணத் துவங்கியது, ஆலோசகர்களாக நுழைந்த பார்ப்பனர்கள் முதலில் ஒரு கட்டத்தில் கருவறைக்குள் நுழைந்த உடன் முதலில் செய்தது, தமிழில் பூசைகள் நடை பெறுவதை நிறுத்தினர். அதன் பிறகு தாங்கள் கொண்டுவந்த வடமொழி பூசைகள் தொடர்கதையானது, அது வரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த சைவ வைணவ தலைமை பண்டாரங்களும் பட்டர் களும் சிவாச்சார்களும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். பண்டாரங்களையும், பட்டர்களையும்  எடுபிடியாக மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள் வருவாயைக் குறியாக்கொண்டு மாயவதம் மற்றும் யாகம் இதர என பெருவாரியாக செய்யத் துவங்கினர், இரக்கமற்ற முறையில் அதிகாரவர்க்கத்தை சூழ்ச்சி களின் மூலம் மடக்கி தங்கள் ஆளு மையை முழுமையாக தனதாக்கிக் கொண்டனர்.

சுமார் 300 ஆண்டு தொடர்ந்து நடந்து வந்த சூழ்ச்சி வெளியே தெரிந்த போது அதன் உண்மை முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த கால காட்டத்தில் ராசராசசோழன் மிகவும் பெருவாரியான புரோகிதர்களை தமிழகத்திற்குள் அழைத்து வந்தான், இது எந்த சூழ்ச்சியினால் நடைபெற்றது என்று இதுவரை புரியாவிட்டாலும், சோழர்களின் தொடர்போர் நடவ டிக்கை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் ஆகியிருக்ககூடும்,   அதிகார மையம் முழுவதுமாக கோவில் களுக்கு மற்றப்பட்டது, மூவேந்தர்கள் மட்டுமல்ல குறுநில மன்னர்களும் அரசபையில் பொது பிரச்சனைகுறித்து ஆலோசனை நடத்தியதாக 9-ம் நூற்றாண்டுகளுகு பிறகான பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னருக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்ட நிலை யில் மன்னருக்கும் பார்ப்பனர்களுக்கு மான உறவுஇறுகிவிட்டது, இதுதான் சோழப் பேரரசில் 10-ம் நூற்றாண்டில் அதிக அளவு பார்ப்பனர்கள் நுழைவ தற்கும் அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்காத செல்வம் தருவதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக இருக்ககூடும் (வேறு எந்த காரணமாக இருந்தாலும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை)

கி.பி.10-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவில்கள் உச்சநீதிமன்றங்களைப் போல் ஆனது, அங்கு மன்னரின் ஆணைக்கூட சொல்லாக்காசாகிவிடும், இதற்கு பெரிய எடுத்துக்காட்டு உடை யார்குடி கல்வெட்டில் கிடைக்கிறது. இராசராசரின் மகன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப் பனர்களான ரவிதாசன், பரமேசுவரன், சோமன், மற்றும்  தேவதாசன் ஆகி யோர்களை தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோவில் கூடி அவர்களுக்கு கொடுத்த தண்டனை இவ்வாறு 32 பசுக்கள், 12குடம் பொன் மற்றும் அவர்களுக்கு பணியாட்கள் ,ஆடைகள் கொடுத்து நாட்டு எல்லைவரை பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விட்டு விட்டு வரவேண்டும் என்று தீர்ப்பளித் தாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பார்ப்பனர்கள் மாத்திரம் கோவில் பூசாரியாகும் எழுதாத சட்டம், பார்ப்பனர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அரசர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குள் நுழையும் விதிகள், பிறர் கோவில் சுற்றுப்பிரகாரத்திற்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலையும் சில மக்கள் பிரிவிற்கு கோவில் உள்ள தெருக்களில் கூட நுழையக் கூடாது என்ற நிலையும் உருவானது, இவ்வாறு தனது ஆதிக் கத்தில் கோவில் களை கைப்பற்றிய பார்ப்பனர்கள் தாங்கள் கொண்டுவந்த புராணம் மற்றும் இதர கதைகளை மேலும் பொய்களையும் கட்டுக் கதை களையும் புகுத்தி அவர்களாகவே விதிகள் எழுதத் துவங்கியது பலனாக இன்று வரை கோவில்களில் அருட்சக ராக உள்ளனர்.    ஆதாரம்:-தஞ்சை கல்வெட்டுகள் (சென்னை அருஞ்காட்சியகம்), இந்து மதக் கொடுங்கொன்மை வரலாறு (தவத்திரு தர்ம தீர்த்த அடிகளால்)

- இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்? (வே.கன்னுப்பிள்ளை) அய்.ஏ.எஸ்.

==தங்களின் வருகைக்கு நன்றி==

திராவிடர் கழகம் நடத்திய கச்சத்தீவு மீட்பு மாநாட்டுத் தீர்மானம்

26.7.1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடைபெற்ற தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்புரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:


பாக். ஜலசந்தியின் இருபுறமும் இருக்கும் தமிழ் நாட்டின் மேற்குக் கரையில் உள்ள மீனவர்களும், தமிழீழத்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மீனவர் களும் மொழி, கலாச்சார ரீதியில் பல ஆயிரம் ஆண்டு காலமாக நெருங்கிய உறவினால் பிணைக்கப்பட்டுள் ளார்கள். ஆங்கிலேயர்கள் வெளியேறும் காலம் வரை தங்கு தடையற்ற படகுப் போக்குவரத்து இரு நாடு களுக்கும் இடையே நடைபெற்று வந்தது. தமிழ்நாட்டில் உள்ள வேதாரண்யம், அதிராம் பட்டினம், தொண்டி, மண்டபம், இராமேசுவரம் போன்ற துறைமுகங் களுக்கும், தமிழீழப் பகுதியில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, ஊர்க்காவல் துறை, நெடுந்தீவு, மாதகல், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை போன்ற துறை முகங்களுக்கும் இடையே தொன்று தொட்டுப் பயணிகள் மற்றும் வணிகப் போக்குவரத்து நடைபெற்று வந்தது - வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும். இலங்கை - சுதந்திரம் பெற்ற பிறகு தமிழர் துறை முகங்களை சிங்களவர் மூடிவிட்டனர். இரு நாட்டுத் தமிழர்களுக்கிடையே நிலவி வந்த தொடர்புகள் திட்ட மிட்டுத் துண்டிக்கப்பட்டன. இதன் விளைவாக இரு நாடுகளையும் சேர்ந்த தமிழ் மீனவர்கள் பெரும் பாதிப் பிற்கு உள்ளானார்கள்.

இருபுறத்திலும் உள்ள தமிழ் மீனவர்களும் தங் களுக்கு இடையே எவ்வித சச்சரவுமின்றி தாராளமாக வும், சுதந்திரமாகவும் மீன்பிடித் தொழிலைச் செய்தனர். இரு தரப்புத் தமிழ் மீனவர்களும் ஒரு போதும் ஒருவ ருக்கு எதிராக மற்றவர் தமது அரசுகளிடம் புகார் செய்ததில்லை.
இராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமான கச்சத் தீவில் - ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் - இருநாட்டுத் தமிழர்களும் கலந்து கொண்டு மணவினைத் தொடர்புகள் வரை கொண்டு மகிழ்ந்து வந்தனர். ஒரு போதும் அவர்களுக் கிடையே எத்தகைய சச்சரவும் மூண்டது கிடையாது. தமிழருக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்ததாகக் கூறப்படுவது சட்டப்படி செல்லாத ஒன்றாகும்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் எத்தகைய புகாரும் கூறாத நிலையில் சிங்களக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டை யாடத் தொடங்கியது. குறிப்பாக 1983-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை சிங்களக் கடற்படை, விமானப்படை ஆகியவற்றால் 250-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 150-க்கும் மேற் பட்டவர்கள் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். தழிழ் மீனவர்களுக்குச் சொந்தமான கட்டுமரம், விசைப்படகு, வலை ஆகியவற்றுக்கான சேதம் ரூ. 12 கோடிக்கு மேலாகும். மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக் கும் போக முடியாத வகையில் ஏற்பட்ட இழப்பு கணக் கிட முடியாததாகும்.பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசோ இலங்கை அரசோ இதுவரை எந்த நட்ட ஈடு எதுவும் அளிக்கவில்லை.

சிங்கள அரசு தமிழ் மீனவர்களைக் கொன்று குவிப்பதற்கு கச்சத்தீவு பிரச்சினை காரணமல்ல; மீன்பிடி உரிமை காரணமல்ல; தமிழ்ப்போராளிகள் பிரச்சினையும் காரணமல்ல; இவையெல்லாம் போலிச் சமாதானங்களாகும்.

தமிழர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களை அழித் தொழிக்க வேண்டும் என்றும், சிங்களப்பேரின வாதிகளின் இனவெறிக் கொள்கையே இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை அனைவரும உணர வேண்டும். இத்தகைய தமிழினப் படுகொலை வெறி யுடன் செயற்படும் சிங்களக் கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. அதைத் தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசோ ஒப்புக்காகக் கண்டனக்குரல் எழுப்புவதுடன் தனது கடமை தீர்ந்துவிட்டதாகக் கருதி அமைதி கொள்கிறது.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதைத் தடுக்க முன் வராத இந்திய - தமிழக அரசு களை இம்மாநாடு கடுமையாக கண்டனம் செய்கிறது.

கச்சத்தீவின் உரிமை, சட்டப்படி இன்னமும் நம்மி டமே உள்ளது என்ற உண்மையை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்துவதோடு, கச்சத்தீவை மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என இம் மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.

எனவே, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மேலே கண்ட இரு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்திய - தமிழக அரசுகள் தவறுமேயானால், அக்டோபர் திங்களில்  (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) அனைத்துக் கட்சித் தலைவர்களும் இராமேசுவரத்திலிருந்து படகுகளில் தியாகப்பயணமாகப் புறப்பட்டு - சிங்களக் கடற்படையை எதிர்கொண்டு அறிவழியில் போராட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இப்போராட்டத்தில் சேர முன்வருமாறு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

==தங்களின் வருகைக்கு நன்றி==

வியாழன், 12 செப்டம்பர், 2013

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்

திராவிட நாடு இதழில் (16.1.1944)  மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத் திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந் ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத் திரமோ அடிப்படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?
13)    அதற்குப் பெண்டு பிள்ளை களும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14)    சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?
15)    ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு  பெயர்கள் ஏன்?
16)    சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள் கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17)    ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?
18)    சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?
19)    சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20)    சைவ சமயத்திற்குள்ள சித் தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21)    சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித் தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22)    சமயாச்சாரிகள் என்போர் களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23)    சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர் களையும், சமணர்களையும் துன் புறுத்தியதேன்?
24)    துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர் களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?
25)    வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26)    சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27)    எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?
28)    இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29)    சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30)    விக்ரக ஆராதனை உண்டா?
31)    வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32)    ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33)    சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34)    சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35)    சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?
36)    அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37)    முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38)    கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39)    ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது  ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40)    கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?
41)    பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?
42)    கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?
43)    ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44)    சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45)    நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46)    அவை தனித்தனி கடவுள் களா?
47)    நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48)    மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49)    சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திரு விளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50)    திருநீறு எதற்காகப் பூசுவது?
51)    இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52)    ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53)    இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54)    கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?
55)    மலையரசன் மகனென்றால் என்ன?
56)    இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57)    இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?
58)    இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59)    அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?
60)    சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?
61)    மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
62)    திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
63)    பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?
64)    சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
65)    மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66)    ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67)    சைவர்களுக்குச் சரியான முறை எது?
68)    சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69)    வருணாசிரமம் உண்டா?
70)    உண்டென்றால் ஆதாரம் எது?
71)    இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?
73)    சைவ மடங்கள் எதற்கு?
74)    அவை இதுவரைச் சாதித்த தென்ன?
75)    அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76)    இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77)    இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78)    அருகதை உடையவர் யார்?
79)    பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
80)    வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?
http://www.viduthalai.in/e-paper/67126.html
==தங்களின் வருகைக்கு நன்றி==

இந்து அறநிலையத் துறையின் திருமண மண்டபங்களில் நாத்திகர்களுக்கு இடம் இல்லையா? கலைஞர் கருத்து

கேள்வி: இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்று அரசின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?
கலைஞர்: அப்படியொரு முடிவினை அ.தி.மு.க. அரசு எடுத்திருக்குமேயானால் அது கண்டிக்கத்தக்க முடிவாகும். பண்டித நேரு அவர்களே தன்னை ஒரு நாத்திகர் என்றுதான் அறிவித்துக் கொண்டார். அண்ணாவே நாத்திகர்தான். அந்த அண்ணாவின் பெயரை தங்கள்  கட்சிக்கு வைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பது வேதனைக்குரிய ஒன்றாகும். அந்தச் சுற்றறிக்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பகுத்தறிவாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின் முன் இந்த ஆணை நிற்காது என்று திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முரசொலி 12.9.2013
http://www.viduthalai.in/e-paper/67121.html

==தங்களின் வருகைக்கு நன்றி==

அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பெரியார் ஆயிரம் தேர்வு





திங்கள், 9 செப்டம்பர், 2013

பேராவூரணியில் அறிவார்ந்த வினாவை எழுப்பி தமிழர் தலைவர் உரை

தன் சொந்த செலவில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னது ஒழுக்கமா? திருடிக்கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா?

தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய இயக்கத் தோழர்களை, தன் சொந்த செலவில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று சொன்னது ஒழுக்கமா? அல்லது திருடிக்கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா? என்ற அறிவார்ந்த வினாவினை எழுப்பி தமிழர் தலைவர் உரையாற்றினார்.

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூ ரணியில் திராவிடர் கழக வட்டார மாநாடு 8.9.2013 அன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மனித உருவம், யானைத் தலையில் ஒரு கடவுளா?

உலகத்தில் ஒரு கேலிக்கூத்தான விஷயம் என்னவென்றால், யானை முகத்தில் பெரிய பெரிய பொம்மைகளை வைத்திருக்கிறார்கள்; இன்னும் அதிலும் பெருமை என்னவென்றால், அரசாங்கமே உச்சவரம்பு போட்டு, இத்தனை அடிக்கு மேலே இருக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். வெளிநாட்டுக்காரன் வட இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ சுற்றுலா வரும்பொழுது, இதனைப் பார்த்தால் என்ன என்று கேட்டால்,  இது ‘‘Elephant God’’ யானை முகக் கடவுள் என்று இங்கிலீசில் விளக்கிச் சொல்லும்பொழுது, அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். ஏனென்றால், இந்த மாதிரி ஒரு கடவுளை நம் நாட்டில் காண முடியவில் லையே என்று. மனித உருவம், யானைத் தலையில் ஒரு கடவுளா? என்று. இந்தக் கடவுள் 9 ஆம் தேதிதான் பிறக்கிறார் என்று சொல்கிறார்கள்.

வடலூர் வள்ளலார் மிக அழகாகச் சொல் வார்: ஆனகரே சரிதம் எல்லாம் பிள்ளை விளையாட்டு என்று.

சின்ன பிள்ளைகள் மண்ணில் உட்கார்ந்து கொண்டு, தண்ணீர் எடுத்தோ அல்லது மூத்திரம் பெய்தோ அந்த மண்ணைப் பிடித்து சாமி என்று சொன்னால் அதனை நீங்கள் கண்டிப் பீர்கள். ஆனால், இப்பொழுது பெரிய பிள்ளை கள் விளையாடுகிறார்கள், வேறொன்றுமில்லை. இதனை நாங்கள் சொல்லவில்லை, வள்ளலார் அவர்கள் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

மற்றவர்களைப் புண்படுத்தவேண்டும் என்ப தற்காகச் சொல்லவில்லை, கொஞ்சம் நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கடவுளுக்குப் பிறப்பும் இல்லை;

இறப்பும் இல்லையாம்!

கடவுள் என்று சொன்னால், எல்லாவற்றையும் கடந்த பரம்பொருள்; அதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. பிறகு எப்படி கடவுள் பிறப்பார்?

ஒரு கடவுள் சஷ்டியில் பிறக்கிறார்; கந்தர் சஷ்டி. இன்னொரு கடவுள் சதுர்த்தியில் பிறக் கிறார்; விநாயகர் சதுர்த்தி. இன்னொரு கடவுள் நவமியில் பிறக்கிறார்; ராம நவமி. இன்னொரு கடவுள் அஷ்டமியில் பிறக்கிறார்; கோகுலாஷ் டமி, கிருஷ்ணன் பிறக்கிறாராம்.

விசித்திரமான ஒரு தகவல் என்னவென்றால், இதில் எந்தக் கடவுளும் கடைசி வரையில் இருந் ததில்லை. இந்தக் கடவுள்களுடைய வரலாற்றை எடுத்துக்கொண்டால், அவர்கள் எழுதியிருக் கின்ற புராணம்தான்; விடுதலையிலோ, குடிஅரசுவிலோ, தந்தை பெரியார் எழுதியோ, அண்ணா எழுதியோ, தி.மு.க. அச்சிட்டோ, கலைஞர் எழுதியோ வந்ததில்லை.

காலங்காலமாக ஒவ்வொரு கடவுள்களுக்கும் புராணம் எழுதி வைத்திருக்கிறார்கள். நம் கண் முன்னாலேயே கடவுளை உண்டாக்குகிறார்கள். கடவுளை உண்டாக்கியவர் யார்? நமக்கே தெளிவாகத் தெரிகிறதே!
களிமண்ணை வண்டி வண்டியாகக் கொண்டு வந்து போட்டு, அதனை அச்சில் வார்த்து, விநாய கன் உருவத்தை உண்டாக்குகிறார்கள்.

மதவெறித்தனத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு போவதற்காக...

அதற்கு முன்னாடி பார்த்தீர்களேயானால், வடநாட்டிலிருந்து இந்துத்துவா என்ற பெயரில், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். இவைகளெல் லாம், பக்தியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு மதவெறித்தனத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு போவதற்கு இன்றைக்குப் பயன்படுத் திக் கொள்கிறார்கள்.

இதற்கு முன்பெல்லாம் பெரிய பெரிய அளவில் இந்த மாதிரி பொம்மைகளை வைத்துப் பழக்கம் இல்லை. கடைவீதிகளில் சின்னச் சின்ன தாக பிள்ளையார் விற்கும்; அதனை வாங்கிக் கொண்டு வந்து, ஒரு குடையை வைத்து, அதைக் கொண்டுபோய் வீட்டில் வைத்து, மூன்று நாள் கழித்து கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ போடுவார்கள், இதுதான் வழக்கமாக இருந்தது.

கடவுளை உண்டாக்குகிறவனும் நம்மாள்; களிமண்ணை பிடிக்கின்றவனும் நம்மாள்; அத னைக் கொண்டு போய் மூன்றாவது நாள் கட லிலோ, குளத்திலோ, ஆற்றிலோ, கிணற்றிலோ போடுகிறார்கள் என்றால், இதனை வெளி நாட்டுக்காரன் கேட்டால், கடவுளுக்கு இவ்வளவு பெரிய விபத்தா நடக்கிறது உங்கள் நாட்டில் என்று கேட்கமாட்டானா? சிந்திக்க வேண்டாமா நீங்கள். இது அறிவுடைமையா? இதனை பிள்ளை விளையாட்டு என்று வள்ள லார் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது.

அறிவியல் வளர்ந்த காலத்திலும்...

கொஞ்சம்கூட சங்கடம் இல்லாமல், மக்க ளுடைய அறியாமையை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள்? பாருங்கள். அதுவும் எந்தக் காலத்தில், விண்வெளிப் பயணம் நடக்கக்கூடிய காலத்தில். ஒரு பக்கத்தில் ராக்கெட் விட்டு, நிலாவுக்குப் பயணமாகிறான்; அடுத்தபடியாக செவ்வாய்க் கிரகத்தில் இடம்பிடிப்பதற்கு இப் பொழுது அறிவிப்பு வெளியிடுகிறார்கள்; இவ் வளவு பணம் கட்டினீர்கள் என்றால், செவ்வாய்க் கிரகத்தில் குடியேறலாம் என்று. இவ்வளவு அறி வியல் வளர்ந்த காலத்தில், இன்னமும் களிமண் எடுத்து பிசைந்து, சின்னப் பிள்ளைகள் விளை யாட்டுபோல, அதனை வைத்துக்கொண்டு, அதற்கு ஊர்வலம் என்று சொல்லி, காவல்துறை யினருக்கும் கஷ்டங்களைக் கொடுத்துக்கொண்டு, சங்கடங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கி றார்கள். ஒரு பக்கத்தில் கொலை, கொள்ளை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அதனைக் கண்டுபிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக் கிறான்; தூணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டு, அப் புறம் எதற்கு இந்தப் பொம்மைகளைக் கொண்டு வந்து வைத்து, அதற்குப் பூசை புனஷ்காரங் களைச் செய்து, படையல் வைத்து, திரும்பவும் கடலில் போய் கரைக்கிறார்கள்.

கடவுளை உண்டாக்கியவர் யார்? களிமண் ணைப் பிடித்து வைப்பவர்தானே!

நீங்கள் நன்றாக ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்னாடியே செய்ததினால்தானே, பிள்ளையாரை இங்கே கொண்டு வந்து வைத் திருக்கிறார்கள். அப்புறம் என்ன 9 ஆம் தேதி பிறக் கிறார் என்று சொல்கிறார்கள். குழந்தை பிறந் தால், மருத்துவமனையில் பிறக்கின்ற நாளைத் தானே பிறந்த நாள் என்று சொல்வார்கள். குழந்தையை வீட்டிற்குக் கொண்டுவரும் நாளையா பிறந்த நாள் என்று சொல்வார்கள்?

ஆனால், நம் நாட்டில் இது ஒரு விளையாட்டு போல நடந்துவருகிறது. இதற்குப் பிரச்சாரத் தைப் பார்த்தீர்களேயானால், மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

அரசியல் சட்டத்திலுள்ள அடிப்படைக் கடமைகள்

நம்முடைய அரசியல் சட்டத்தில், மிக முக்கிய ஒரு பகுதி இருக்கிறது. அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties) 51-A    என்ற பிரிவு. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது.

It shall be the duty of every citizens of India- அந்த அடிப்படைக் கடமைகள் பகுதியிலே, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பொறுப்பு உண்டு.

to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;

ஒவ்வொரு குடிமகனும் பின்பற்றப்படவேண் டியது என்னவென்றால், அறிவியல் மனப் பான்மை;

அறிவியல் மனப்பான்மை மட்டுமல்ல, அதைவிட மனிதநேயம்; அதைவிட, எதையும் கண்ணை மூடிக் கொண்டு நம்பாமல், ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கவேண்டும். அதற் கும்மேலே சீர்திருத்தம் செய்யப்படவேண்டும். இது இந்திய அரசியல் சட்டம் ஒவ்வொரு குடி மகனுக்கும் அளித்திருக்கின்ற அடிப்படை கடமை.

எங்களைத் தவிர வேறு யார்?

இதை இந்த நாட்டில் ஒழுங்காகக் கடைப் பிடிக்கின்ற ஒரு இயக்கம் இருக்கிறதென்றால், இந்தியாவிலே அது திராவிடர் கழகம் - பகுத் தறிவாளர் கழகம் ஆகியவற்றைத் தவிர, வேறு உண்டா?

நடுநிலையாளர்கள், பொதுநிலையில் இருந்து சிந்தித்துப் பதில் சொல்லுங்கள்.

மற்றவர்கள் செய்யத் தவறிய பணியை, நாங்கள் செய்கின்றோம்.

மக்களை எந்த அளவிற்கு ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.

என் கையில் இருப்பது, ஆர்.எஸ்.எஸ். பத் திரிகை. விஜயபாரதம் என்ற வார இதழாகும்.
இதில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால்,

பிள்ளையாருக்குக் கோவில் கட்டலாமா?  கோவில் கட்டலாம். ஆனால், ஒரு அய்தீகம் இருக் கிறது. அந்தக் கோவிலில் கொண்டு வந்து வைக் கின்ற பிள்ளையார் சிலை இருக்கிறது பாருங்கள், சிற்பி செதுக்கி வைத்தால், அச்சிலைக்கு சக்தி கிடையாதாம்; திருடிக்கொண்டு வந்துதான் வைக்கவேண்டுமாம்.

இதற்கு என்ன அர்த்தம்?

பிள்ளையார் பக்தர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும், கோபப்படாமல் - இச்செயல் ஒழுக்கத்தை வளர்ப்பதாகுமா?

கணினியைக் கையில் கொடுத்தால், பிள்ளையாரை வரைகிறார்கள்!

2014 ஆம் ஆண்டு வரவிருக்கின்ற கால கட்டத்தில், இப்படி இருந்தால், நாடு உருப் படுமா? வளருமா? இதனை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அறிவியல் மனப்பான்மை வளர வேண்டாமா? அறிவியலை நாம் பாடம் படித் தால் மட்டும் போதுமா? அறிவியல் கருவிகளை கையில் வைத்திருந்தால் போதுமா? கணினியைக் கையில் கொடுத்தால், பிள்ளையாரை வரை கிறார்கள்; பிள்ளையார் சாப்பிட்டாரா? என்று போடுகிறார்கள்.

கேட்டதைக் கொடுக்கும் கற்பக விநாயகர் என்று சொல்கிறான்; மணக்குல விநாயகர் என்று சொல்கிறார்கள்;

பிள்ளையாரையே பலவித மாகப் பிரித்து, இந்த இந்த விநாயகருக்கு, இன்ன இன்ன சக்தி என்று சொல்கிறார்கள்.

இன்று காலையில் வெளிவந்துள்ள தமிழன் நடத்துகின்ற நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி யை பாருங்கள்,
வெளிநாடு செல்ல விசா ஏற்பாடு செய்யும் பிள்ளையார்! என்று.

நம்மை மட்டும் முட்டாள் ஆக்குவது மட்டு மல்லாமல், வெளிநாட்டுக் காரனுக்கும், பிள்ளை யாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

சவுதி அரேபியாவிற்கோ, துபாய்க்கோ அல் லது மற்ற நாடுகளுக்கோ வேலைக்குச் செல்ல வேண்டுமானால், விசா வேண்டுமென்றால், அவன் என்ன சொல்கிறானோ, அதன்படி பின் பற்றினால்தான் விசா கிடைக்கும். இதுதான் நடைமுறை.

வெளிநாடு செல்ல விசா ஏற்பாடு செய்யும் பிள்ளையார்! என்று செய்தி வெளியிட்டால், இதைவிட  அயோக்கியத்தனம் வேறு உண்டா?

இதனை எடுத்துச் சொல்வதற்கு எங்களைத் தவிர, வேறு யாரும் தயாராக இருக்கிறார்களா? நாங்கள் எதையாவது தவறாகச் சொல்கிறோம் என்று சொன்னால், நாங்கள் திருத்திக் கொள்கி றோம் அல்லது மாற்றிக் கொள்கிறோம்.
பிள்ளையார் சிலையை உடைத்த பெரியார்!
தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், ஏன் பிள்ளையாரை உடைத்தார்? அவருக்கு என்ன பிள்ளையார்மீது கோபமா? உடைப்பதில்கூட ஒரு கட்டுப்பாட்டினை தன்னுடைய தோழர் களுக்கு சொல்லியிருக்கிறார், குளத்தருகிலோ, மரத்தடியிலோ இருக்கின்ற பிள்ளையாரைக் கொண்டு வந்து உடைக்கவேண்டாம்; நம்மு டைய காசைக் கொடுத்து வாங்கி அந்தப் பிள் ளையார் சிலைக்குச் சக்தி இல்லை என்று உடைத் துக் காட்டவேண்டும் என்றுதான் சொன்னார்.

இன்னொருவருடைய பொருளை எடுக்கக் கூடாது; அது திருட்டாகிவிடும்; அது தவறாகும். அதை செய்யக்கூடாது.
ஆனால், பக்தன் என்ன சொல்கிறான்? திருட் டுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று சொல்கிறான்.

இரண்டு பேருடைய ஒழுக்கத்தையும் ஒப் பிட்டுப் பாருங்கள்.

கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர் பெரியார் அவர்கள், பிள்ளையாரை உடைத்த பெரியார் அவர்கள், உங்களுடைய சொந்த செல வில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று சொன்னது ஒழுக்கமா? அல்லது திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா?

நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!

தமிழனால் நடத்தப்படும் நாளிதழில் வெளி யிட்டுள்ள வார இதழில்,

வெளிநாடு செல்ல விசா கிடைக்கவில்லையா.... அல்லது கிடைக்கத் தாமதமாகிறதா? கவலையை விடுங்கள். உடனே விசா பிள்ளையாரை வணங்குங்கள். அடுத்த சில நாட்களில் நீங்கள் அலையோ அலை என்று அலைந்த விசா, உங்களைத் தேடிவரும்...!

விலாசம் தேடி அலையவே வேண்டாம். யாரைக் கேட்டாலும், இடத்தைத் துல்லியமாக சொல்கிறார்கள். எல்லாம் விநாயகரின் மகிமை. இவர் ஜகனாதன் என்பவரின் வீட்டில் குடியிருக்கிறார். விசா பிள்ளையாரின் மகிமையை உற்சாகத் துடன் சொல்ல ஆரம்பித்தார் ஜகனாதன்.

அய்ந்து நட்சத்திர ஓட்டலில் ஜி.எம்.ஆக பணியாற்றி வருகிறேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரு பிள்ளை கள். இருவரும் வெளிநாட்டில் உள்ளனர். நாங்கள் திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோவிலின் தர்மகர்த்தா பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இப்போது சோளிங்கர் மலைக்கோவிலில் கருட சேவை செய்து வருகிறோம். தவிர, வேலூர் அருகே பிருந்தா வன ஸ்ரீ துளசி கிருஷ்ணா கோவில் ஒன்றை கட்டியிருக்கி றோம். இந்தக் கோவில் காதலர்களின் பிரச்சினையைத் தீர்க் கும் தலமாக விளங்கி வருகிறது என்று முன்னுரை வழங்கி யவர், விசா பிள்ளையார் குறித்து சொல்ல ஆரம்பித்தார்.

நான்கு சாலைகள் கூடும் இடத்தில் எங்கள் வீடு இருப்ப தால், காம்பவுண்டில் ஒரு பிள்ளையார் சிலையை வைக்கும்படி வாஸ்து நிபுணர்கள் கூறினார்கள். 1988 ஆம் ஆண்டு இந்தக் கோவிலைக் கட்டினோம். லட்சுமி கணபதியாகத்தான் இந்தப் பிள்ளையார் எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆரம்பத்தில், சாதாரண காம்பவுண்ட் பிள்ளையார் போல்தான் இருந்தார். காம்பவுண்ட் பிள்ளையார் என்றாலும், மூன்று கால பூஜைகள் இவருக்குத் தவறாமல் நடக்கும். சாலையைக் கடப்பவர்கள் ஒரு நிமிடம் நின்று வணங்கிவிட்டுச் செல்வார்கள்.

இந்நிலையில், பத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு வாலிபர் இந்தப் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துவிட்டுச் சென்றார். போனவர் பத்து நாள்களில் மறுபடியும் வந்து எங் களிடம், இந்தப் பிள்ளையாரை வணங்கிவிட்டுச் சென்றேன். அந்த மகிமையில் வெளிநாட்டில் வேலைக்கான விசா கிடைத்துவிட்டது என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. வெளிநாட்டு விசா கிடைத்ததில் இவ்வளவு சந்தோஷமா? என்று நினைத்தோம்.

விசாரித்தபோதுதான் உண்மையைச் சொன்னார். அதாவது, விசா கிடைப்பது இழுபறியாக இருந்ததாம். கிடைக் கவே கிடைக்காது என்று கூட நினைத்தாராம். இந்தச் சூழலில் தான் இந்தப் பிள்ளையாரை வணங்கியிருக்கிறார். கிடைக் கவே கிடைக்காது என்றிருந்த விசாவும் கிடைத்திருக்கிறது.

இப்படியாக அந்த வாலிபர்தான் இந்தப் பிள்ளையாருக்கு விசா பிள்ளையார் என்று பெயரிட்டார். இந்தப் பிள்ளை யாருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கூட இரண்டு முறை சிங்கப்பூர், மலேசியா சென்று வந்திருக்கிறார்!

தொடக்கத்தில் விசாவுக்காக மட்டுமே வந்தவர்கள் இப்போது எல்லா விதமான வெளிநாட்டுப் பயண பிரச்சினை களுக்கும் இவரைத் தேடி வருகிறார்களாம் என்று சொல்லும் ஜகனாதன் ஒவ்வொரு சதுர்த்திக்கும் இந்தப் பிள்ளையாருக்கு விசேஷ பூஜை செய்கிறாராம்.

இதுபோல் மக்களை ஏமாற்றுவது; மிகப் பெரிய அளவிற்கு இன்னமும் மோசடி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனைக் கண்டு நாம் வெட்கப்படவேண்டாமா? ஆகவேதான், எங்களைப் பொறுத்தவரையில், இந்த இயக்கம் யாரையும் சங்கடப்படுத்துவதற்கல்ல.

அறியாமையைவிட பெரிய நோய் வேறொன்றுமில்லை!

அறியாமையைவிட பெரிய நோய் வேறொன் றும் இல்லை என்றார் இங்கர்சால் அவர்கள். மனி தனுக்கு இருக்கின்ற நோய்களிலேயே அறியாமை தான் மிகப்பெரிய நோய். அந்த அறியாமை யிலிருந்து மக்களை விடுவித்தால்தான், மிகப் பெரிய வாய்ப்பை உருவாக்க முடியும். அதனு டைய விளைவாகத்தான் இன்றைக்கும் இந்தப் பிரச்சினைகளை நாங்கள் மக்கள் மத்தியில் சொல்கின்றோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

http://www.viduthalai.in/e-paper/66991.html