Social Icons

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

பேரறிஞர் அண்ணாவின் அழைப்பு!

மாணவர்கள் காளைப் பருவத் தவர்; கலை பயிலும் நிலையினர்; நாட்டின் நரம்புகள்; விலையிலா மாணிக்கங்கள்; நாட்டின் ஈட்டி முனைகள்.

வாலிபர்கள் நடமாடும் எஃகு கம்பிகள், அகத்திலே அருவி போல ஆர்வம், முகத்திலே வீரக்கலை, செயலிலே துடிதுடிப்பு காணப்படும்.

தலைகுனிந்து நிற்பது, பெருமூச்சு விடுவது, நம்மால் ஆகிற காரியமா? என்று இழுத்துப் பேசுவது ஆகிய முறைகள் அவர்களுக்குப் பிடிக்காதன. அவர்கள் செயலாற்றும் வீரர்கள்
மாணவர்களைப் பற்றிய, இளை ஞர்களைப் பற்றிய அறிஞர் அண்ணா வின் வரையறை இது. மாணவர்களும், இளைஞர்களும் ஏற்படுத்திய எழுச்சி தான் 1967-இல் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற் படுத்தியது. நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை தூக்கியெ றிந்து - தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. அரசியல் ஆர்வத்தைக் காட்டிலும், பதவி மோகத்தைக் காட்டிலும்,  பெரியது - முக்கியமானது - அவசியமானது. சமுதாயப் புரட்சிப் பணிகளே என்பது அறிஞர் அண்ணாவின் எதிர்பார்ப்பு.

வீரம் ததும்பும் வாலிபர்களின் உணர்ச்சி செல்வம் இருக்கிறதே அது வெள்ளத்தால் அழியாது - வெந் தணலால் வேகாது; கொடுத்தாலும் நிறைவுறுமேயன்றி ஒரு நாளும் குறையாது. அந்த செல்வம் நம்முடன் ஏராளமாக இருக்கிறது என்று நம்பிய அண்ணா வாலிபர்கள் உரி மைப் போர்ப்படையின் ஈட்டிமுனைகள்; அவர்தம் உள்ளத்தில் புரட்சிப் புயலிருக்கும். வாழ்க்கை என்னும் பொய்கையிலே விசாரம் என்னும் நச்சு கலக்கப்படாத பருவம். பகுத்தறிவு என்னும் பகலவன் வெளிச்சத்தில் விஷப்பூச்சிகள் போன்ற சுயநலக் கருத்துக்கள் அழிக்கப்பட்டு இருக் கும். தூய்மையான அந்த வாலிப உள்ளங்களில் சந்தனக்காட்டைக் கடந்து மணமும், குளிர்ச்சியும் மருகி மக்களை மகிழ்விக்க வருகிறதே தென்றல் அது போன்றது வாலிபம்.


மாயாவாதமும், மனமருட்சியும் வாலிபர்களிடம் நெருங்க நடுங்கும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரம் - வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்ற வீரம் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், அநீதியைக் கண்டால் கொதித் தெழுந்து தாக்கும் பண்பு வாலிபர் களிடையே மிகுந்திருக்கும்.

சும்மாயிருப்பதா நாம் என்ன சொரணையற்றவர்களா? புறப்படு... போரிடு... அநீதி அழியுமட்டும், அல்லது நாம் அழியும் வரை போர்... இந்தப் பேச்சுதான் வாலிபர் செவி ஏறும் என்று பறைசாற்றி சமுதாயப் போருக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. அதற்கான ஆர்வமும், உற்சாகமும், உணர்வுகளும் இளைஞர் களிடம் இருப்பதாக எண்ணினார்.
மனித சுதந்திரம், ஜாதீய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை, சமுதாயம் பெற்றிட இளைஞர்களின் படை அணிவகுக்க வேண்டும். ஆர்ப் பரித்து தோள்தட்டி பெரியாரின் பெரும்படையிலே தன்னை இணைத் துக் கொண்டு புதிய மாற்றத்துக்காக, மறுமலர்ச்சிக்காக செயலாற்றிட வேண் டும் என்பதை பேரறிஞர் அண்ணா குறிப்பிடும்போது

சுதந்திரம், விடுதலை என்றால் சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல வாலிபன் எண்ணுவது. புதிய நிலை, புது அழகு, புது உருவம், புதிய மகிழ்ச்சி, நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான். உண்மையும் அது தான்!


வைதீகம் என்னும் நோய்க்கு டாக்டர்கள் மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது, பின் யாரால் அந்த நோயைப் போக்கடிக்க முடியும்? வாலிபப்பருவத்தில் உள்ள மாணவர் களால் தான் முடியும். பகுத்தறிவு என்னும் ஒரே மருந்தால் தான் வைதீ கம் என்னும் நோயைப் போக்கடிக்க முடியுமே தவிர வேறு எந்த மருந்தா லும் போக்க முடியாது என்ற அண் ணாவின் கணிப்பு எந்த அளவு நிதர்சனமானது!

பகுத்தறிவை - சுயமரியாதைக் கருத் துக்களை பரப்புவது என்பது சாதாரண மான பணியல்ல. சருக்கு மரத்தில் ஏறுவ தற்கு ஒப்பானது. இமயமலை வெயிலில் காய்கிறது என்பதற்காக குடைபிடிப்பது போன்ற காரியம். அஞ்சா நெஞ்சம் படைத்த இலட்சியவாதிகளால் தான் இந்தப் பணியிலே வெற்றியை ஈட்ட முடியும். பெரியாரின் தொண்டர்கள் என் பவர்கள் சீரிய இலட்சியவாதிகள்தான். நாட்டின் ஒப்பற்ற செல்வங்கள்தான். அதனால்தான் பேரறிஞர் அண்ணா அஞ்சா நெஞ்சு படைத்த இலட்சிய வாதிகள் தாம் ஒரு நாட்டிற்குக் கிடைக் கக்கூடிய ஒப்பற்ற செல்வங்கள் என்றார்.
புரட்சி என்பது இயங்கும் சக்தி! அதைப் பொசுக்கிவிட யாராலும் முடியாது. புரட்சி என்பது மக்களின் போராடும் சக்தியின் வழிவருவது

புரட்சி வாலிபத்தின் கூறு! பகுத்தறி வாளர் ஆயுதம்! பழமை விரும்பிகள், புரட்டர்கள், எதேச்சதிகாரிகள், சர்வாதி காரிகள் ஆகியோருக்கு நஞ்சு என்ற அண்ணாவின் கருத்துப்படி வாலிபத்தின் கூறாகிய புரட்சிப் பணியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். பகுத்தறிவுப் புரட்சிப் பணியில்,  ஜாதி ஒழிப்பு எனும் புரட்சிப் பணியில், மத ஒழிப்பு எனும் புரட்சிப் பணியில், மூடநம்பிக்கை ஒழிப்பு எனும் புரட்சிப்பணியில், பெண்ணடிமை ஒழிப்பு எனும் புரட்சிப் பணியில் இளைஞர்கள் தங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும்.

புதுமை மலர - புரட்சி ஓங்கிட வேண் டும். மறுமலர்ச்சி காண புரட்சி வழி வகுக்கும். மடமை இருட்காட்டிலிருந்து மக்களை மீட்டு புதுயுகம் காணச்செய்ய புரட்சி தேவை. சமுதாயப்புரட்சி தேவை. அதற்குரிய மருந்து பெரியாரின் கொள் கையே! பெரியாரின் இயக்கமே அந்த மருந்தை மக்கள் மயப்படுத்தும். புதுமையும், பொதுமையும் மக்களை சமப்படுத்தும். அனைத்து நிலை ஒடுக்கு முறையிலி ருந்தும் மக்களை மீட்க திராவிடர் கழகத்தின் ஓயாத போர்முறையில் ஒப்பற்ற வீரர்களாக இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திட வேண்டும்.

திராவிடர் கழகத்தில் இணைந்து தொண்டர்களாக, தோழர்களாக இளை ஞர்கள் பரிணமிக்க வேண்டும்.  இயக்கப் பணி ஆற்றுவதில் இன்பம் காண வேண்டும். காரணம் இனத்தின் இன்பம் - மகிழ்ச்சி இயக்கத்தால் மட்டுமே சாத்தியம். கடமை உணர்ச்சிமிக்க காவலர்களாக இளைஞர்கள் இயக்கப் பணியாற்றி தமிழர் சமுதாயத்தைக் காத்திட வேண்டும் என்பதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா சிறப்பாக எடுத்துரைக்கிறார் பாருங்கள்.

கட்சிப் பணியும், களத்துப்பணி போன்றே! வீரருக்கு ஏற்றதே அன்றி, விலாவிலே விரக்திப் புழு நடமாடுவோருக்கோ, மனதிலே சுயநலம் எனும் குளவி கொட்டிடுவோருக்கோ ஏற்றதன்று. சிறுசெயல்புரிய மட்டுமே தெரிந்தோர்க்குப் பெருநெறி பிடித்தல் அரிது. கட்சிப்பணிக்கு இத்தகைய கடமை உணர்ந்த காவலர் தேவை என்கிறார்.

கோயில்களிலே உள்ள ஆயிரங்கால் மண்டபங்கள் எல்லாம் கல்விச் சாலை களாய், ஆராய்ச்சி நிலையங்களாய் மாறினால்,

நூற்றுக்கால் மண்டங்கள் எல்லாம் நூல் நிலையங்களாய், வாசக சாலை களாய் மாறினால், மக்கள் மடமையி னின்றும், விடுபட்டு மதியைப் பெறுவது எத்துணை எளிது என்று சிந்தியுங்கள் தோழர்களே! என்ன அற்புதமான மாந்தநேய சிந்தளை அண்ணாவிடம்!
நாடு முழுவதும் எத்தனை எத்தனை கோயில்கள், எத்தனை எத்தனை ஆயிரங்கால், நூற்றுக்கால் மண்டபங்கள், மோட்ச குளங்கள், புனித நீராடும் நீர்நிலைகள்... மக்களின் உழைப்பும் நேரமும் எவ்வளவு பாழ்படுத்தப்பட்ட அவலங்கள்!

இதோ இன்னமும் பேரறிஞர் பெருந்தகை பேசுவதைப் பாருங்கள் ஏழை மக்கள் மனம் குமுறிக் கிடக்க கடவுளுக்கு குடமுழக்குகள் நடைபெறு கின்றன. பசிக்கு உணவில்லை; இருக்க இடமில்லை. வாழ வசதியில்லை மக்களுக்கு!

ஆனால் ஆண்டவனுக்கு கோயில் திருப்பணி, குடமுழுக்குகளுக்குக் குறை வில்லை.

ஏழை ஏங்கித் தவிக்க எம்பெருமான் ஏற விதவிதமான வாகனங்கள் தேடு கிறார்கள்.

வயிறார உணவில்லை; ஆனால் வைரமுடி வேங்கடத்தானுக்கு!

இந்நிலை பற்றி எவர் கவனிக்கின் றனர். படித்த கூட்டம் பதவியிலும், பரமன் அருளிலும் மூழ்கிக் கிடக்கிறது. பாமரரோ பரிதவிக்கின்றனர் பசியால்!

இந்நிலை அகற்றப்பட வேண்டும். இல்லாதோர் வாழ்வில் ஏற்றம் கிடைக்க வேண்டும். பஞ்சமும் பசியும் அகல வேண்டும். பாரோர் பரம திருப்தியாய் வாழ வேண்டும் என்று எந்த பக்தனாவது சிந்தித்தானா? மக்கள் சுபிட்ச வாழ்வு வாழ வேண்டும் என்று மக்கள் நலப் பணிகளில் பக்த கே()டிகள் ஈடுபடுவதுண்டா? வறுமையை ஒட்டி வளமையை மக்களுக்கு வழங்கிட கோயில் திருப்பணி செய்வோர் முயற் சித்ததுண்டா?
நாத்திக இயக்கமான - மனிதநேய இயக்கமான திராவிடர் கழகம் பக்தர் களின் வழிபாட்டுரிமைக்கும், சமூக நீதிக்கும் போராடி உரிமையைப் பெற்று கொடுக்காது போயிருந்தால் நிலமை என்னவாகி இருக்கும்?

பக்தி சிகாமணிகளைப் பார்த்து பகுத்தறிவுப் பகலவனின் தளபதியாம் அண்ணா விடுக்கும் அறிவார்ந்த வினாவை படியுங்கள்:

பக்திமான்கள் எவராவது இந்த நாட்டிலே தெய்வம் கொழித்திருக்க, எம்பெருமானுக்கு எல்லையற்ற திருக் கோயில்கள் எழுப்பப்பட்டு, அன்றாடம் ஆறு கால பூஜை தவறாது நடந்துவர, அதற்கென மலைபோல் செல்வம் முடங்கிக் கிடக்க, இத்தனை குடும் பங்கள் மண்ணோடு மண்ணாய் பசியால் வாடி மடிகின்றனவே என்பதை நினைத்ததுண்டா? நெஞ்சிலே ஈரம் இருந்து கை வைத்துச் சொல்ல துணி வுண்டா? அவ்வேழை மக்களின் பரிதாப நிலையைப் பாடினதுண்டா? பாடிப்பா ரோரின் பகுத்தறிவுக்குச் சிந்தனை தந்ததுண்டா? வறுமையை மீட்க வழிகோலினதுண்டா?

அண்ணாவை அரசியல் பதவிக்குப் பயன்படுத்துவோரும் ஆழமாக சிந்திக்க வேண்டிய வினாக்கள்தான்!

அண்ணாவின் உருவம் கொடியிலே, கட்சியின் பெயரிலே மட்டும் இருந்தால் போதுமா? அவரின் அர்த்தமுள்ள பகுத்தறிவுச் சிந்தனையை கருத வேண்டாமா? அரசியலாளரிடம் அதை யெல்லாம் எதிர்பார்க்க கூடாதோ!

பகுத்தறிவு ஒளிப்பாய்ச்சல் மூலம் தந்தை பெரியார் மூட்டிய அறிவுத் தீ அறியாமைக்கு எதிராக மளமளவென பற்றுவதைப் பாருங்கள் இளைஞர்களே! தமிழர் தலைவராம் ஆசிரியர் அழைக்கிறார். ஈரோடும் காஞ்சியும் தமிழர்களின் மானங் காக்கும் மண் மட்டுமல்ல. மகத்தான பகுத்தறிவின், தன்மானத்தின் இரு கண்கள், மடமையை மாய்த்து இனம் செழித்திட, தமிழர் நாடு அறிவு வழியில் நடைபோட, சமத்துவ நெறியில் சமுதாயம் அமைந் திட ஓயாதுழைக்கிறார் தமிழர் தலைவர். இளைய தலைமுறையே எழுந்து வா! இயக்கத்தில் உன்னை இணைத்துக் கொள். தந்தை பெரியார் பணி முடிக்க தீயாய் உழைத்திட உறுதி கொள்!

பேரறிஞர் அண்ணாவின் அன்புக் கட்டளை - ஆசை மொழிகள் இதோ.. படியுங்கள் - பாரோர் வியக்க செயலாற் றுங்கள் தோழர்களே! எது முறையோ அதன் வழி நடவுங்கள்.

அறிவுக்கு ஒத்ததைக் கொள் ளுங்கள்.

எதிர்ப்புக்கு அஞ்சாதீர்.
மதத்தின் முன் மண்டியிடாதீர்.
மானமே மனிதனை மனிதனாக்கு கிறது என்பதை உணருங்கள்.
உலுத்தர் பேச்சை உதறித் தள்ளுங்கள்.
சமத்துவம் நாடுங்கள்.
சகோதரத்துவம் கோருங்கள்.
ஜாதி - மத பேதத்தைச் சாடுங்கள்.
தோல்வி கண்டு சலிப்புறாதீர்கள்.
மாற்றார் மமதை கண்டு மனம் மருளாதீர்கள்.
சிந்தித்து முடிவுக்கு வாருங்கள்
அதன்வழிச் செயலாற்றுங்கள்!
==தங்களின் வருகைக்கு நன்றி==