Social Icons

வியாழன், 12 செப்டம்பர், 2013

இந்து அறநிலையத் துறையின் திருமண மண்டபங்களில் நாத்திகர்களுக்கு இடம் இல்லையா? கலைஞர் கருத்து

கேள்வி: இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான மண்டபங்களை நாத்திகர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்குத் தரக் கூடாது என்று அரசின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறதே?
கலைஞர்: அப்படியொரு முடிவினை அ.தி.மு.க. அரசு எடுத்திருக்குமேயானால் அது கண்டிக்கத்தக்க முடிவாகும். பண்டித நேரு அவர்களே தன்னை ஒரு நாத்திகர் என்றுதான் அறிவித்துக் கொண்டார். அண்ணாவே நாத்திகர்தான். அந்த அண்ணாவின் பெயரை தங்கள்  கட்சிக்கு வைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பது வேதனைக்குரிய ஒன்றாகும். அந்தச் சுற்றறிக்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பகுத்தறிவாளர்கள் இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால் சட்டத்தின் முன் இந்த ஆணை நிற்காது என்று திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதை இந்த அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
முரசொலி 12.9.2013
http://www.viduthalai.in/e-paper/67121.html

==தங்களின் வருகைக்கு நன்றி==